சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள ஊடாக வெளியேறினர் சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர். சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
தமிழ்த்­தே­சிய  கூட்­ட­மைப்பின் இந்­தி­யா­வுக்­கான விஜ­யமும்  அதனால் எதிர்ப்­பார்க்­கப்­பட்ட  பெறு­ம­தி­மிக்க   எதிர்ப்­பார்ப்­பு­களும்   எந்­த­வ­ள­வுக்கு நிறைவு கொண்­டி­ருக்­கி­றது என்­பது பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்கள் தற்பொழுதுமுன்வைக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றன. கூட்­ட­மைப்­பி­னரின் அறிக்­கை­களின் படியும் அவர்கள் பத்­தி­ரி­கை­க­ளுக்கு விடுத்­தி­ருக்கும் செய்­தி­க­ளையும் அலசி ஆராய்ந்து பார்க்­கின்ற போது இந்­தி­யா­வுக்­கான தமது விஜயம் எதிர்ப்­பார்த்­ததை விட பாரிய வெற்­றியைக் கண்டிருக்கிறது என அவர்­களால் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை  வட கிழக்கு மக்கள் மற்றும் புலம் பெயர்ந்­த­வர்கள் கூட்­ட­மைப்பு தவிர்ந்த ஏனைய கட்­சியின் தலை­வர்கள் பார்­வையில்...
  கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக  பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் 'வவுனியா பொடியன்' என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து...
இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் இந்திய பிரதமர் மோடி மீது நம்பிக்கை இருப்பதாகவும், தமிழ் பேசும் மக்களின் பழைய நிலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து விட்டு இலங்கை திரும்பும் வழியில், சென்னை தி.நகரில் உள்ள...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழர் விடையத்தில் பல கட்டமான முடிவுகளை இலங்கை அரசுக்கு எதிராக எடுத்த நவிப்பிள்ளை, ஐ.நாவை விட்டு செல்வது ஈழத்...
உக்கிரேன் கோர விமான விபத்துக்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்
  பிரபாகரனை புகழ்ந்து பாடிய கருணா இன்று மகிந்த வெற்றி பெற வேண்டும் என்று வக்காளத்து வாங்குவது தனது உயிரை தக்கவைத்து கொள்ளவே இந்த வீடியோவை பாருங்கள் TPN NEWS
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார் என அவரது சகோதரரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி புதிய தொகுதி அமைப்பாளர் பதவியை பொறுப்பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார். அமைச்சரின் வெற்றிக்காக இரத்தம் வியர்வை சிந்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அவர் விரட்டிவிட்டார். கிரமமாக ஒவ்வொருவராக உதவி...
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலகில் தொடர்ச்சியாக 22 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒரே கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பரிசு வழங்கப்படும். வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி துரோகம் இழைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியானது, தமிழ்த்...
அரசாங்கமானது தீர்வுத்திட்டத்தில் அக்கறைகாட்டாது பதவிக்காலத்தை நீடிப்பதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றது. தமிழ் மக்கள் படும் துன்ப, துயரங்கள் இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நன்கு தெரியும். இந்தியா சென்று பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை. என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு சென்றுதான் பேசவேண்டும் என்ற...