சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை வாங்கியுள்ளது பிரபலமான சிங்கள நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாத ராஜபக்ச, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என சகல வகையிலும் இப்போது தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இதெல்லாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள்...
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு இலங்கை வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை இன்று தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த கருத்தை வெளியிட்டு வந்தபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு வீசா வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் தமது அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து...
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கடந்த 18ம் திகதி புலனாய்வுப் பிரிவினரால்,திணைக்களகத்தின் அபகீர்த்தி வாய்ந்த நான்காவது மாடியில் வைத்து மூன்று மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வடக்கில் கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வெடிபொருட்களும் இராணுவத்துக்கு எதிரான இருவட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியே சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜனவரி நடுப்பகுதியில், சிறிதரன் அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டரீதியான அனுமதி எதுவும் இன்றி, அங்கு இரண்டு முறை 35 பேருக்கும் மேற்பட்ட இராணுவத்தினராலும், பயங்கரவாத புலனாய்வுப்...
மகேலஜெயவர்த்தன இன்று தனது டெஸ்போட்டியிலிருந்து ஒய்வு பெறுகிறார் நாட்டின் ஜெனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடைகொடுத்து அனுப்பும் காட்சி TPN NEWS
 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கையை தண்டிக்கும் நோக்கத்துடனேயே செயற்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் யுத்தத்தின் இறுதி கட்டங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்நாட்டிலேயே நாம் ஆரம்பித்துள்ளோம். எமக்கு பொறுத்தமான வேகத்தில் அதனை முன்னெடுக்கிறோம். உளளுர் நடவடிக்கைகள் முழுமை பெறுவதற்கு முன்னர் அதற்கான கால அவகாசத்தை வழங்காமல்...
போலியான முறையில் சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாணந்துறை மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சந்திப்புக்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்கள் மட்டும் கொழும்பிற்கு அழைத்து இரகசியமான முறையில் அண்மையில்...
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாக சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானதுதான் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக ப.சிதம்பரம் வந்திருந்தார். அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம், தாம் கருணாநிதிக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். மேலும் இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார். இலங்கையில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதாகக் காட்டப்படும் சேனல் 4...
ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்,  இந்த பதவி தற்போது மிகவும் ஆபத்தான பதவியாக மாறியுள்ளது. 17வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு 18 வது திருத்தச்...
1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள். இதேபோல, 2002...
மார்பக ப்புற்று நோய்கனா  அறிகுறிகள் அதற்கான சிகிச்சைகள் மற்றும் அதனை  வருமுன் காப்பது எப்படி!!? சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய். நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு முறை ஒரு உயிரை இழக்கும் போதும், நம்மையும் அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து, பயத்தில் நாமும் கொஞ்சம் சாகவே...