கடந்த காலங்களில் பேச்சு முறிவதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல. அரச தரப்பினரே-சம்பந்தன்
Thinappuyal News -0
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது.
அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம்...
இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான யோசனை மற்றும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை என்பன தமது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற அடிப்படையில், தமது அரசாங்கத்தின் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் வகையில்...
வடக்கு-கிழக்கில் வாழும் மக்களில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முன்வைத்து அரசியல் தீர்வினை வலியுறுத்துகின்றார்கள்.
Thinappuyal News -
வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயாரில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
சிரச சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியி்ட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்தத் தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வாகவே இருக்கும். எனவே அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
வடக்கு-கிழக்கில் வாழும்...
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனைகள் இடம் பெற்ற போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சாட்சியம்
Thinappuyal News -
மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10.08) காலை இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனைகள் இடம் பெற்ற போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சாட்சியம் அழிக்க மறுத்து விட்டதோடு அறிக்கை சமர்ப்பித்தார்.
இன்று (10.08.14) ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர் பிரதேசச் செயலக கட்டிடத்தில் 3 ஆம் நாள் அமர்வு இடம் பெற்ற போது காலை 10.30...
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் 6 ம்ஆண்டு நினைவுதினம் இன்று.
தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர்.
சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள்...
சிங்கள இனவெறியர்களைக் கருவியாகக் கொண்டு தமிழ் மக்களைக் கொன்றழித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்துள்ள அமெரிக்காவும் இந்தியாவும்
Thinappuyal News -
அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.
தலைவர் கூறியது போல...
பங்குத்தந்தை சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
Thinappuyal News -
எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.
இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.
மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி...
பிரேசிலின் ஆபத்தான வளைவில் அதிபயங்கர விபத்துக்கள்
கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தக தொகுதி திறப்பு விழாவிற்கு 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - 07ல் அமைந்திருந்த கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் முன்னைய அலுவலகத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஆகேட் இன்டர்நெஷனல் என்ற பெயரில் வர்த்தகத் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது.
இதன் மறுசீரமைப்புக்கு 5000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வர்த்தகத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்காக...
விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா
Thinappuyal News -
விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்ரேலியா புகலிடம் வழங்கியுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து,
இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும், அவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்ரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத...