குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக...
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் புகலிட விண்ணம் செய்திருந்த போதிலும் பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை வேறும் நாடுகளில் பாதுகாப்பாக...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் உதவ முடியாது: சம்பந்தன் கூறியதாக லக்பிம தகவல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் உதவ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க...
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரையை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கிக் கொண்டதுடன், பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. தனது மன்னிப்புக் கடிதத்தினையும் இலங்கை...
  இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு சிறிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கைக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மலேசியாசில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ என்ற மொஹமட்...
இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பது என்ற தனது முக்கிய கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   ஐந்து வயது சிறுவன் கல்கமுவவில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பது என்ற தனது முக்கிய கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது என்பதை இந்த சம்பவம் புலப்படுத்துகிறது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய கடப்பாடுடைய பொலிஸ் திணைக்களத்தை...
  "இலங்கை அரசாங்கம் பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தத் தவறினால், இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்" - இவ்வாறு எச்சரித்துள்ளார் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம். வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் கடந்த மாதம் இடம்பெற்ற மத வன்முறைகளை தடுத்து நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து தன்னைப் பதவி விலகுமாறு தனது ஆதரவாளர்கள் கடும் அழுத்தம் கொடுத்தனர் என...
அரசியலுக்கு வருமாறு கோத்தபாயவிற்கு, விமல் அழைப்பஅரசியலுக்கு வருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். தாய் நாட்டை நேசிக்கும் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களின் சேவை தேவைப்படுகின்றது. இவ்வாறானவர்களின் பங்களிப்பின் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எனவே, பாதுகாப்புச் செயலாளரை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்திற்காக நாம் கோத்தபாயவை நேசிக்கவில்லை. அவரது செயற்திறன் மிக்க...
ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் சில முரண்பாடுகள் நிலவி வருவதாகவும், சிலவற்றுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியை விட்டு விலகினால், அசாத் சாலிக்கு நேர்ந்த கதியே தமக்கும் நேரிடும் எனவும், தேசிய அரசியல் நீரோட்டத்தை விட்டு விலகியிருக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஆதரவாளர்கள்...