…2009-ம் ஆண்டு மே மாதம்வரை பிரபாகரனை ‘தேசிய தலைவர்’ என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர், பிரபாகரன் கொல்லப்பட்டபின், அந்த டியூனை மாற்றிக் கொண்டனர். அக் கட்சியின் தூண்களின் ஒருவரான (சுமந்திரன் மன்னிக்கவும்) சரவணபவன் எம்.பி. கொடுத்த பேட்டி ஒன்றில், “எமது தலைவர் இரா.சம்பந்தன்தான் தற்போது ‘தேசிய தலைவர்’ ஆகியுள்ளார்” என்றார். அது அவர்களது உள் கட்சி விவகாரம். யாரையும் தேசிய தலைவர் என்று அப்பாயின்ட் செய்து கொள்ளலாம்....
  ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல். 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளி களுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு...
வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு! முடிந்தால் குழப்புங்கள்: ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு சவால் ஊடக கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு எதிராக அரசாங்கத்தின் வன்முறை குழுக்கள் முன்னெடுத்து வரும் கேவலமான மற்றும் கோழைத்தனமான நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களுக்காக பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படும் என ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. முடிந்தால் அந்த பயிற்சி கருத்தரங்களை குழப்புமாறும் செயற்பாட்டுக்குழு சவால் விடுத்துள்ளது. இலங்கை பத்திரிகை சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற...
பதவி போட்டிகளால் குழப்பங்களுடன் காணப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த மூன்று வருடங்களாக தலைமைப் பதவியைக் குறி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குழப்பங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமக்குப் பதவியை விட்டுத் தராவிட்டால், வல்வெட்டித்துறை நகர சபையை முடக்கப் போவதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு எச்சரிக்கைக்...
அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வழங்கிய அன்றைய பேட்டி புலிகளின் தலைவரின் சயனைட் இரகசியத்துடன் அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனின் திருமணத்தை நடத்திவைத்தவர் அன்ரன் பாலசிங்கம்தான்! அந்த நிகழ்வை அழகாக விவரிக்கிறார்… ‘‘அப்போது பிரபாகரனுடன் நானும் சென்னையில் இருந்தேன். இந்தியா கொடுக்கிற ராணுவப் பயிற்சியை முறையாகப் பயன்படுத்துவதிலும், சரியான திட்டமிடலோடு பணியாற்றுவதிலும் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார் பிரபாகரன். இந்நிலையில், திருவான்மியூரில் நாங்கள் வசித்த வீட்டுக்கு மதி, வினோஜா, ஜெயா, லலிதா என்ற நான்கு இளம் பெண்கள் வந்தனர். யாழ்ப்பாணத்தில்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலும், இதற்காக அரசமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக ஆராயவும் முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாபதி மகிந்த ராஜபக்சவே இந்த குழுவை நியமித்துள்ளதாக தெரியவருகின்றது. அரசமைப்பின் 17 திருத்தத்தை மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்துவது மற்றும் தேர்தல் முறையில் மாற்றங்கள் தொடர்பாகவும் இந்த குழு ஆராயவுள்ளது. இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள முன்னால் பிரதம நீதியரசர் சரத் என்...
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தகவல்களை அறிய அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தொழில்நுட்ப கருவிகள் அரசியல் நோக்கங்களுக்காகவும் பொருளாதார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை பயன்படுத்தி அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதுடன் கணனிகளின் தரவுகளும்...
ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கடந்த 25ம் திகதி கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்சி செய்தமை, வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் முரண்பாடுகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்துள்ளது. டதுசாரி கட்சிகள் ஒரு நிலைப்பாட்டையும், தேசிவாதம் பற்றிய கடும்போக்குடைய கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் பிறிதொரு நிலைப்பாட்டையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றுமொரு விதமான நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எடுக்கப்படும் தீர்மானங்களை நேரடியாக அல்லது பகிரங்கமாக விமர்சனம் செய்யும் அளவிற்கு இந்த...