நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவும் கொடுக்காமல் இருந்தார். யுவன், இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில்...
   தீபாவளிக்கு 3 படங்கள் மோதலுக்கு தயாராகின்றன.தீபாவளி என்றதும்  ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயின். ஏற்கனவே முருகதாஸ், விஜய் இணைந்து உருவாக்கிய ‘துப்பாக்கி‘ கடந்த ஆண்டு ஹிட் ஆனது. ‘கத்தி‘ வெளியிடுவதற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு...
  இந்தியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 95 ரன்னில் தோற்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் கூக்கை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தி இருந்தார். கூக் அதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இலங்கை அணியிடம் தோற்று இருந்ததால் வேறு கேப்டனை நியமிக்குமாறு அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூக் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியில் தொடர்ந்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவர் மஹேலா ஜெயவர்த்தனே. வலதுகை பேட்ஸ்மேனான இவர் பந்தை நேர்த்தியாக அடித்து ஆடுவதில் வல்லவர். களத்தில் நிலைத்து விட்டால் ஸ்கோர் சீராக உயர்வதை தடுக்க முடியாது. இலங்கை அணியின் கேப்டனாகவும் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் மஹேலா ஜெயவர்த்தனே, பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் நாளை தொடங்கும் (ஆகஸ்டு14-18) 2-வது டெஸ்டுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார். இது அவரது கடைசி டெஸ்ட்...
தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 397 ரன்களும் சேர்த்தன. 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 181 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சிபான்டா 45 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க தரப்பில் டேன் பீட் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின், மோர்னே மோர்கல் தலா 3...
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் வீரர்களுக்கு விருது வழங்கும் வகையில் அரசு சார்பில் 1961 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான அஷ்வினை அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது. அஷ்வினுக்கு இவ்விருது வழங்கப்பட்டால், அர்ஜூனா விருதைப் பெறும் 46வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அஸ்வின் முறையே...
- இஸ்ரேல் ராணுவத்துக்கும், காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா மீது இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளில் சில ஏவுகணைகள் வெடிக்காமல் அப்படியே நடுரோட்டில் கிடக்கின்றன. தற்போது இரு தரப்பினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதால் வெடிக்காத குண்டுகளை காஸா போலீஸ் வல்லுனர்கள் செயலிழக்க வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்படி வெடிக்காத ஒரு ஏவுகணை குண்டை வல்லுனர்கள் செயலிழக்க...
ஈராக்கில் அரசுக்கு எதிராக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மொசூல் உள்ளிட்ட ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக்குக்கு அமெரிக்கா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் படைகளை அனுப்ப அமெரிக்கா மறுத்து விட்டது. அதே நேரத்தில் ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், போர் யுத்திகளை வழங்கவும் 250 ராணுவ ஆலோசகர்களை அனுப்பி...
கடந்த 2006-2007ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் இனக்கலவரங்கள் அதிகரித்துக் காணப்பட்டபோது அமெரிக்கா தலையிட்டு ஷியா பிரிவினரான நூரி அல் மாலிகியைப் பிரதமராக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இருப்பினும், அங்குள்ள சன்னி, குர்து இன மக்களை அன்னியப்படுத்தும்விதமாக அதிகாரங்களைத் தனதாக்கிக்கொண்ட பிரதமரின் நடவடிக்கை அங்கு மீண்டும் இனக்கலவரங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாத பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றிகளைப் பெற்றுள்ளபோதிலும் ஈராக்கின் புதிய பிரதமராக தற்போதைய துணை சபாநாயகர் ஹைதர் அல்...
‘எபோலா’ என்ற புதிய உயிர்க் கொல்லி நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இது எபோலா வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சியாரா லோனுக்கும் ஒன்று. இங்குள்ள ஞ்ஜாலா ஜியிமா என்ற கிராமத்தில் தான் முதன் முதலாக எபோலா நோய் தாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இக்கிராமத்தை சியாரோலோன் நாட்டின் ‘எபோலா’ நோய் உருவாகிய மையம் என்றழைக்கின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 500 பேர்...