‘எபோலா’ எனும் உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நோய் தாக்காமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் உலகம் முழுவதும் இந்த நோய் அதி தீவிரமாக பரவி ஏராளமானவர்களை பலி வாங்கி வருகிறது. இதற்கிடையே பல முன்னணி நிறுவனங்கள் இந்த நோய்க்கு மருந்து தயாரித்துள்ளன. ஆனால் அவற்றை இன்னும் பரிசோதித்து பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை.
இருந்தாலும் நோயின் கடுமை கருதி...
சென்னை: முதல் பார்வையிலே காதலில் விழுந்தேன் என்றார் சமந்தா. அவர் யாரோ நடிகர் மீது கொண்ட காதல் பற்றி இப்போது சொல்லவில்லை. வேறு எதைச் சொல்கிறார் என்கிறீர்களா. இதோ அவரே சொல்கிறார். சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது கறுப்பு நிற நாய் ஒன்று என் காரையே ஏக்கத்துடன் பார்த்தது. அதை பார்த்தவுடன் உடனே அதன் மீது காதல் பிறந்துவிட்டது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு அதன் அருகே...
பிரியா ஆனந்த்-லட்சுமி ராய்க்கு இடையே பிரச்னையா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். அதர்வா, பிரியா ஆனந்த், லட்சுமிராய் நடிக்கும் படம் இரும்பு குதிரை. இதுபற்றி இயக்குனர் யுவராஜ் போஸ் கூறியது: அதர்வாவிடம் இக்கதையை சொன்னபோது துள்ளி குதித்தார். சாதாரண பைக் என்றால் பயிற்சி தேவையில்லை. ரேஸ் பைக்கான இது 8 கியர்களுடன் சிறப்பு அம்சங்கள் பொருந்திய அசாதாரண பைக். கண்டிப்பாக பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்றேன். பிறகு...
தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து நிதானமாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் மந்தமாக பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 158.3 ஓவர்களில் 397 ரன்கள் (சராசரி 2.50) சேர்த்து ஆட்டம்...
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை (15...
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த சச்சின் தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பை-பாஸ் சர்ஜ்ரி செய்ய நேரிட்டது. இதனால் தான் ராஜ்யசபா கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாமல் போனதாக சச்சின் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்யசபா கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வுகளில் தன்னால் பங்கேற்க இயலாததால் தனக்கு விடுமுறை அளிக்கும்படி...
டோனி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் சந்தித்த 13 டெஸ்ட் தோல்வி விவரம்:–
1. இலங்கையிடம் 10 விக்கெட்டில் தோல்வி (காலே, 2010).
2. தென்ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் தோல்வி (செஞ்சூரியன், 2010).
3. இங்கிலாந்திடம் 196 ரன்னில் தோல்வி (லார்ட்ஸ், 2011).
4. இங்கிலாந்திடம் 319 ரன் வித்தியாசத்தில் தோல்வி (நாட்டிங்காம், 2011).
5. இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் இங்கிலாந்திடம் தோல்வி (பர்மிங்காம், 2011).
6. இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 8...
2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
2015–ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர் பார்த்து இருக்கிறேன். ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 2 ஆண்டில் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களை குவித்து...
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை வரும் 14-ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட நவாஸ் ஷரிப் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதே நாளில் தாகிர் அல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி ஆகியவை அரசை எதிர்த்து பாராளுமன்றம் வழியாக தனித்தனியாக மாபெரும் பேரணிகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையில், பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் மதகுரு...
முஸ்லிம்களும், பெரும்பான்மை கிறிஸ்துவர்களும் நிறைந்து வாழும் நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ளூர் செலேகா போராளிக் குழுக்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் அப்போதைய பொஸைஸ் அரசுடன் அதிகாரங்களை பங்கு போட முனைந்தனர். ஆனால் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததோடு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இவர்கள் தலைநகரை முற்றுகையிட இவர்களின் தலைவர் மைக்கேல் ஜோடோடிடா அதிபராகப் பதவி ஏற்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவ பலேகா எதிர்ப்பு இயக்கத்தினர் வன்முறைக் கலவரங்களில்...