யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு காணி உரிமையாளர்களுடன் இணைந்து நாம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என கூறப்படும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மக்களுடைய காணிகளை மிக நீண்டகாலம் மக்களுக்கு வழங்காமல் வைத்திருந்தமையினால், காணி உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பலம்வாய்ந்த சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை...
தமிழ்ச் சினிமாப் படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
Thinappuyal News -
தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரைவிலேயே அனுபவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் கலாசார மண்டபத்தில் இன்று, வலி.தென்மேற்கு மற்றும் காரைநகர் இளைஞர் சம்மேளங்கள் இணைந்து நடாத்திய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நிலையில் தாயகப் பகுதியில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள்...
தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை- முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது.
Thinappuyal News -
65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பின் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசு இல்லையேல், தமிழனுக்கு எதும் இல்லை என்ற நிலை இலங்கைத் தீவில் உருவாகிவிட்டது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையை தனி மனித உரிமைப் பிரச்சினையாகவும், மனிதவுரிமை பிரச்சினையாகவும் சுருக்கிவிடும் முயற்சியில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது.
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத்துக்கு வெறுமனே புனர்வாழ்வும் , பொருளாதார அபிவிருத்தியையும் சிங்கள பேரினவாத அரசோ...
இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.
Thinappuyal News -
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.
ஐ.நா விசாரணைக்குழு நியூயோர்க், ஜெனிவா, பேங்கொக் ஆகிய நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதுடன் அதற்கான சத்திய கடிதம் ஒன்றும் அவர் வழங்கியுள்ளார்.
அத்துடன்...
பாலிவுட்டின் ஹாட் டாப்பிக் தற்போது சர்வின் சாவ்லா தான். இவர் தமிழில் நடித்தார் என்றால் எத்தனை பேருக்கு தெரியும், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தாரே அவர் தான்.
ஆனால் இப்படம் ஓடாததால் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார், அங்கு ஹேட் ஸ்டோரி 2 படம் ரெட் கார்பட் போட்டு அழைத்ததால், தற்போது இவருக்கு அங்கு செம்ம மார்க்கெட்.
அதுமட்டுமின்றி கோலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிகிறதாம்,...
நடித்த சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் சிவகார்த்திகேயன். அதேபோல் தன் ரசிகர் பலமும் அதிகமாக, எங்கு சென்றாலும் 50 பேரை அழைத்து தான் செல்வார் என்று சிலர் கூறிவந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மொசக்குட்டி இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார் சிவா. முன்பு போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக வந்து சென்றுள்ளார்.
என்ன என்று விசாரித்தால், மான் கராத்தே படத்திற்கு பின்பு சற்று அடங்கி தான் போய் விட்டாராம்.
வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம்.பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
அவற்றில் நுங்கின் மகத்துவம் அளப்பரியது!‘
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்குக்...
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றை உண்பதன் மூலம் மனிதன் பல உபாதைகளில் இருந்து விடுபடலாம்.
மாதுளையின் நன்மைகள்
* இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப்...
இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பை குறிக்கும். 1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய இணையத்திற்கு வயது 25.
இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார்ந்த கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாக உள்ளன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் தொடர்புபடுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருகின்றன.
1950-ம்...
கடந்த ஆண்டில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்தது, டெங்கு காய்ச்சல். இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது. இதற்கெனப் பிரத்யேகமான சிகிச்சையும் இல்லை. சாதாரணக் காய்ச்சலுக்கான சிகிச்சைதான் டெங்குவுக்கும். இது தானாகவே குணமானால்தான் உண்டு. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக்...