காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
Thinappuyal News -0
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது அடிப்படையற்றது என்றும் ரூவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அமெரிக்க...
தேசிய ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஊடகச் செயலமர்வை நடத்தாதேஎன்று கூறி கொழும்பு இதழியல் கல்லூரிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை முற்பகல் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் குழு என்று தம்மை அடையாளப் படுத்தியவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'ரைட்ஸ் நவ்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஊடகச் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து ஊடகவியலாளர்கள் சிலர் கொழும்புக்குச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அத்தகைய செயலமர்வை நடத்தக்கூடாது என்று...
வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட படத்தை சேனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் பற்றிய படம்தான் இது. பாலசந்திரனின் மரணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து படம் உருவாகியுள்ளது. தமிழர்களின் வீரமும், அறிவும் சரியான...
ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது உறுதியாகியுள்ளது. இதை சூர்யாவே தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. ஆனால் விளம் பர படங்களில் மட்டும் நடித்தார். அவரை மீண்டும் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் படாத பாடு பட்டனர். ஆனால் ஜோதிகா நோ சொல்லிவிட்டார். குடும்பத்தை கவனிப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்வது என பிசியாக இருந்தார். இப்போது அவரது குழந்தைகள் தியா, தேவ் வளர்ந்துவிட்டனர்.
இதனால் அவரை...
திருகுமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம், சரபம். நவின் சந்திரா, புதுமுகம் சலோனி லுத்ரா, நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு. பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்துள்ளார். படத்தை அருண்மோகன் இயக்கி உள்ளார். இவர் நடிகர் அனுமோகனின் மகன். படம் பற்றி அருண்மோகன் கூறியதாவது:கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றினேன். இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன்.
சரபம் என்பது புராண விலங்குகளில் ஒன்று. பாதி...
ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆவதற்கு 37 படங்கள் காத்திருக்கின்றன.சமீப காலமாக அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. தயாரான படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் அதிகரித்து வருகிறது. தியேட்டர் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த மாதத்தைக் குறி வைத்து 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. கடந்த 18 ம் திகதி வெளியான வேலையில்லா பட்டதாரி படமும் சதுரங்க வேட்டையும் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் 25-ம் திகதி வெளியாக...
ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு இந்த டாப்ஸி பன்னு. பெரிய ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டவர் நடித்ததை விட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். ஆரம்பம் படத்திற்கு பிறகு தற்போது வை ராஜா வை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். ஏன் இப்படி என்று கேட்டால் இப்படி பதில் சொல்கிறார்.
சோலோ ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தால் இங்கு பெருசா இடம் கிடைக்காது....
2006-ஆம் வருடம் பலுங்கு என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். பரமணி, ஒரு நாள் வரும் ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டு மேட் டாட் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார் நஸ்ரியா. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தன்னுடைய திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார் அனீஸ்.
நஸ்ரியா தமிழில் முதலில்...
பரதேசி படத்தைத் தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் - இரும்புக்குதிரை. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் யுவராஜ் போஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்! இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இரும்புக்குதிரை படத்தின் படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இப்படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டநிலையில், படத்தின் போஸ்ட் புரொட்கஷன்...
அஜித் - த்ரிஷாவுக்கான காதல் பாடல் ரெடி!
அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று அஜித்குமாரின் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான தலைப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறார்களாம். எப்போதும் தனது படங்களுக்கு தமிழில் கவித்துவமான தலைப்புகளை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கௌதம் மேனன். எனவே...