கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான இவர், தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களில் நடித்தார். இப்போது தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடிக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி...
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான். சாய்னா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று எழுதியிருப்பதாவது:–
தெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இன்னொரு விஷயம் என்னை இன்னும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் நான் பதக்கம் வென்றதற்காக ஆந்திர அரசாங்கம்...
வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் லீக் போட்டியில் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்குக்கு எதிராக செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட் பந்து வீசுகையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளு முள்ளுவில் முடிந்தது.
இருவருக்கும் இடையிலான இந்த உரசல் ஓட்டல் அறை வரை நீடித்தது. இந்த நிலையில் தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டு...
காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா
Thinappuyal -
காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 21 வயதான சந்தேலா 206.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அயோனிகா பால் 204.9 புள்ளிகள் பெற்று இரண்டாவதாக வந்தார்.
இன்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான மைதானங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் சுற்றுப்பயண மற்றும் போட்டி அட்டவணை கமிட்டி இன்று ஆலோசனை நடத்தியது.இக்கூட்டத்தில், டெஸ்ட் போட்டிகளை நடத்த பெங்களூர், அகமதாபாத் மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களும், ஒருநாள் போட்டிகளுக்கு கொல்கத்தா, விசாகப்பட்டினம், கட்டாக், தர்மசாலா மற்றும் கொச்சி...
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்தியா 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது.
இதற்கிடையே நாளை 3-வது டெஸ்ட் சவுத்ஆம்ப்டனில் தொடங்குகிறது. இப்போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஸ்டூவர்ட் பின்னி இந்த டெஸ்ட் தொடரில்தான் அறிமுகமானார். முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில்...
இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி ஜெயவர்த்தனே சதத்தால் 421 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்திருந்தது. அம்லா 46 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது....
புதுடெல்லி, ஜூலை 26-
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது.
ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்திகதிக்கு தள்ளி வைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜடேஜா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி., ஜடேஜாவுக்கு 1-வது விதியை மீறியதாக போட்டியின்...
தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தெற்கு சூடான் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர். இதனால், சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த...
கிர்கிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர். குர்மான்பெக் பாகியேவ். இவரது ஆட்சியின் போது எதிர்கட்சியினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தை அடக்க ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். அதில் 77 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இவர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கிரிகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடி தலை மறைவானார்.
இவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில்...