நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க போன்ற மேற்குலக நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஓர் தலைவரிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்து, புலிப் பயங்கரவாதத்தை மீள உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது. நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும். போர்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழி நடத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த...
   இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி தாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்துரைத்த போர்த்துக்கல் பிரதமர், தமது நாடு இலங்கையுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது பொருளாதாரத்தை மட்டும் இலக்காக கொள்ளாது, அரசியல் மற்றும் கலாசாரம்...
வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேற்படி கட்சியின் 34வது தேசிய மாநாடு நேற்றைய தினம் யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் 14 எடுக்கப்பட்டிருந்தன. அவற்றை அறிவிப்பதற்கும், மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குமான 2ம் நாள் அமர்வுகள்...
இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் மௌன­மாக இருக்­கி­றது என்­ப­தற்­காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்­க­றை­யில்­லை­யென்று கரு­தக்­கூ­டாது. உரிய நிலை வரு­கிற போது எல்­லாமே நடை­பெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கூறு­கையில், இந்­தி­யாவின் நிலைப்­பாட்டில் சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு மௌனம் ஏற்­பட்­டி­ருக்­கலாம். அதற்­காக இலங்கை தமிழ் மக்­களை இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் கைவிட்டு விட்­டது என...
  சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள். அதன்பின்னரான ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், ஜே.ஆரின் கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றபொழுது அவை என்ன கூறுகின்றன? 1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கையில் நன்கு பரீட்சயமானதுமான பாராளுமன்ற ஆட்சிமுறையை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு...
கச்சதீவு என்பது இலங்கை மீனவர்களுக்கும், இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பல ஆண்டுகாலமாக இருந்துவரும் பிரச்சினை தான். இந்தப் பிரச்சினையானது இருநாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். ஒரு நாட்டுக்கு சாதகமாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் பாதகமாகவே அமையும். 3ஃ4 முஆ மீற்றர் சுற்றளவு கொண்ட இந்த கச்சதீவு என்னும் மண் திடல் இருநாட்டு மீனவர்களுக்கும் ஒரு பிரச்சினை இல்லை. மாறாக...
    விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விருப்பம் இல்லாமல் எவரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலில் இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை...
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு சிறிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கைக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மலேசியாசில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ...
மணலாறு  பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையணியின் மத்திய நிலையத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். யுத்த காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மணலாறு (வெலிஒயா) பிரதேச மீனவர் நலன்புரி நிலையம் பனேரமைக்கப்பட்டே இந்த மத்திய நியைம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டளை அதிகாரிக்கான உத்தியோகபூர்வ இல்லம், பொது நல வர்த்தக நிலையம், மகளிருக்கான இல்லங்கள், கேட்போர் கூடங்கள் மற்றும் பௌத்த...