தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போயுள்ளவர்களை மீட்டுத்தரும்படியும் வேண்டியும், வவுனியா காளிகோவிலில் தேங்காய் உடைத்து நடத்தப்பட்ட பிரார்த்தனையின்போது உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு, கதறி அழுது வேண்டுதல் நடத்தினர்.  சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு...
மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கையின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று வியாழக்கிழமை வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது அதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின் இன்று இலங்கையில் துரிதமாக கட்டடங்கள், வீதிகள் என...
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலொசனை வழங்க மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். வெளிநாட்டு நிபுணத்துவ ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்த விசரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ கருதுவதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களின் ஆலொசனைகள், அனுபவங்கள் வழிகாட்டல்கள்...
யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்! யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன அவற்றல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமை தொடர்பாகவும், வடமாகாண சபையைக் குறை கூறியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சுவரொட்டிகளில் எவரும் உரிமை கோரப்படவில்லை. அநாமதேய வசனங்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.  
காதலிக்கும் போது சில பெண்கள் தங்களது காதலர்களை எரிச்சலடைய செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம். கேள்வி மேல் கேள்வி ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு குடைந்தால் ஆண்கள் எரிச்சலடைவார்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்க ஒரு உறவில் பெண்கள் இப்படி செய்வது வாடிக்கையான ஒன்றே. சொன்னதையே சொல்வது சில...
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட OnePlus One ஸ்மார்ட் கைப்பேசியின் தொடுதிரையில் கோளாறுகள் காணப்படுவதாக பயனர்கள் முறையீடு செய்துள்ளனர்.அதாவது தொடுதிரையின் கீழ்ப் பகுதியில் மஞ்சள் போன்ற இலேசான நிறம் தோன்றுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் இந்த ஸ்மார்ட் கைப்பேசியினை தயாரித்த நிறுவனம் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், இதற்கான தீர்வு விரைவில் முன்வைக்கப்படும் என தொடர்ந்தும் பயனர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.  
அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் தக்காளி சனம் ஷெட்டி. தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்காமல் இடத்தை காலி செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். அச்சு அசல் தமிழ் பொண்ணு மாதிரி அழகாக தமிழ் பேசுகிறார், கதம் கதம், விலாசம் என இரண்டு படங்களில் நடித்து வரும் சனம் மலையாளத்திலும் நடித்து வருகிறார் அவர் அளித்த சிறப்பு பேட்டி: * சினிமாவுக்கு வந்தது எப்படி? படிக்கும்போது...
 பிரிக்ஸ்' நாடுகளின் வளர்ச்சிக்காக, 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயரில், புதிய வங்கி ஒன்று துவங்கப்படுகிறது. 'சீனாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக, இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில், இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. பிரேசிலில் நடைபெற்ற, 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக,...
காஸா பகுதியில் நடத்தி வரும் தாக்குதல்களை மனித நேய அடிப்படையில் தற்காலிகமாக 6 மணி நேரம நிறித்தி வைப்பதாக அறிவித்த இஸ்ரேல் நாட்டின் விமானப்படை, அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த நேரத்துக்கு முன்னதாக காஸாவின் கடற்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.சில நாட்களுக்கு முன்னர், காஸாவின் துறைமுகம் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்திய கடற்கரை பகுதியில் நேற்று சில சிறுவர்கள்...
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று மனித நேய அடிப்படையில் 6 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான தாக்குதல்களில் குழந்தைகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைவதை தவிர்க்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது....