பாகிஸ்தான் தலீபான் தளபதியை ராணுவம் சுட்டு பிடித்தது. இவர் முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு நேட்டோ நட்பு நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்து வந்தன.இதையடுத்து கடந்த மாதம் முதல் அந்த பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள்,...
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளை நாம் தொடர்ந்து வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும். இந்த மோதல், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஈராக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு...
இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. உலகின் முன்னணி தொழில்நுட்பமாகக் கருதப்படும் இந்த ரோபோக்கள் விளையாடும் கால்பந்து போட்டி கடந்த 1997ஆம் ஆண்டு...
  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென அந்த குடியிருப்பு கட்டிடத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக அங்கிருந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் பலியானார்கள். ரத்த வெள்ளத்தில் மிதந்த பிணங்களை கழிவறையில் வைத்து அடைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து...
நடிகை நித்யா மேனன் டைரக்டர் ஆக முடிவு செய்துள்ளார். 180, மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்திருப்பதுடன் அப்பாவின் மீசை, முனி பார்ட் 3 படங்களிலும் நடித்து வருபவர் நித்யா மேனன். தயாரிப்பாளர்களுடன் மோதிக்கொண்டது உள்பட அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்படுபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழியில் நடித்து வருகிறார். பெரும்பாலான ஹீரோயின்கள் தான் நடித்த கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச அழைத்தால் எஸ்ஸாகி விடுவார்கள். ஆனால்...
கமர்ஷியல் ஹீரோயினாகும் ஆசை இல்லை என்றார் மீரா நந்தன். வால்மீகி, அய்யனார், சூர்யநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மீரா நந்தன். தற்போது சண்டமாருதம் படத்தில் சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார். தமிழ் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்? என்றபோது மீரா நந்தன் பதில் அளித்தார். அவர் கூறியது:சண்டமாருதம் படத்தில் சரத்குமார் காதலியாக கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். எப்போதாவது ஒரு முறைதான் கமர்ஷியல்...
சோலோ பாடல் இல்லாததால் சோகமானார் ஹீரோயின் உதயதாரா. தீ நகர், கண்ணும் கண்ணும், மலையன் போன்ற படங்களில் நடித்த உதயதாரா, நடிக்கும் புதிய படம் பிரம்மபுத்திரா. இது பற்றி பட இயக்குனர் தாமஸ் கூறும்போது, இப்படத்தின் கதை கேட்ட உதயதாரா தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க சம்மதித்தார். பட ஷூட்டிங் நேரத்தில் அவர் சோகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. ஹீரோயினாக நடிக்கும் தனக்கு படத்தில் சோலோ பாடல் இல்லையே...
பாவனாவும் நானும் ஒருவரையொருவர் விரும்புகிறோம். ஆனால் காதலிக்கவில்லை என்றார் மல்லுவுட் நடிகர் அனூப் மேனன். சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பாவனா தற்போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் மல்லுவுட் நடிகர் அனூப் மேனனுக்கும் காதல் என்று திரையுலகில் கிசுகிசு பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ஆங்கிரி பேபிஸ் இன் லவ் மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். புதிய...
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா மகேஷ் பாபுவுடன் சேர்ந்து 2 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மகேஷின் நடிப்பில் வெளியான நே ஒக்கடினே படத்தின் போஸ்டரை பார்த்த சமந்தா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஒரு கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கினார். இது என்ன ஹீரோயின் போஸ்டரில் மகேஷ் பாபுவின் பின்னால் நாய் போன்று நான்கு கால்களில் செல்கிறார் என்று சமந்தா தெரிவித்தார். அஞ்சான் பட போஸ்டரில் சூர்யா...
இந்தியாவிற்கு எதிராக போராட தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான். ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில்...