பெரு நாட்டின் பிரபல தொலைக்காட்சி பாடகி எடிடா குரேரோ (வயது 30) கடந்த மார்ச் மாதம் மூளையில் ரத்தக்கசிவு  மரணமடைந்தார். குரேரோவை அவரது கணவர் பால் ஒலோர்டிகா அடித்து கொன்றுவிட்டார் என கூறப்ட்டது.தற்போது இவர் மீது பெரு போலீசார் கைது வாரண்ட் பிறப்பித்து தேடிவருகின்றனர்.கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அவர் தற்போது ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றார் என்று காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 கோடி மக்கள்தொகை கொண்ட...
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ப்ரீத்தி படேல் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் டேவிட் கேமரூன் புலம்பெயர் இந்திய சாதனையாளரான ப்ரீத்தி படேலை அமைச்சராக நியமித்துள்ளார். எசக்ஸ் கவுண்டியிலிருந்து 2010 ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் தற்போது தான் அவருக்கான முக்கிய பணியை கேமரூன் ஒதுக்கியுள்ளார்....
காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையிலான ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்லும்படி எச்சரித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான தாக்குதல்களில் குழந்தைகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைவதை தவிர்க்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை...
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய 'ரம்மசுன்' என்ற சூறாவளிக்காற்று தலைநகர் மணிலாவின் மிக அருகே கடந்து சென்றது. இந்த சூறாவளிக் காற்று தலைநகரையே செயலிழக்க வைத்து 3,70,000 மக்களைத் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது. பிரதான லுசான் தீவு வழியே இந்தப் புயல் கடந்தபோது அங்கிருந்த பெரும்பான்மையான மரங்கள் சாய்ந்து, மின்சாரம் தடைப்பட்டு சில இடங்களில் மின்சாரக் கசிவையும் ஏற்படுத்தியது. இதன் விளைவாக அரசு அலுவலகங்கள், நிதி சந்தைகள், பள்ளிகள் போன்றவை...
ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நடந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 35 பேர் இறந்தனர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜோப் மாகாணத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், பழமைவாத சன்னி இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நேற்று முதல் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளூர் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதில் இதுவரை 35 பேர்...
பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் பல் உடையும் வகையில் பெண் ஒருவர் தாக்கியுள்ளார். கல்கிஸ்ஸை கடற்கரையோர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விருந்துபசாரம் ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவரை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். குறித்த பெண்ணிடம் தகாத முறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் நடந்து கொள்ள முயற்சித்த போது அந்தப் பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் அடித்துள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப்...
இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் அம்லா பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பீட்டர்சன்- எல்கார் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ளையாடினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 11.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அந்த அணி 70 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பீட்டர்சன் 46 பந்தில் 34 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து...
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும்...
  கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில் 17முதல்20 வரை நடைபெறுகிறது தினமும் மாலை 5மணிக்கு பிசாசின் பிடி; பாவம் .மதுபானம் பில்லிசூனியம். கொலை .இன்னும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து இயேசு விடுவிக்கிறார் சமாதானம் சந்தோசம் பாவமன்னிப்பு தருகிறார் வாருங்கள் கேளுங்கள் அனுபவியுங்கள் TPN NEWS
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிச்சையாக வேலை செய்யாது, மக்களுக்கு கூடிய பிரயோசனம் கிடைக்கும் வகையில் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் இணைந்து உரிய திட்டத்தின் ஊடாக தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று...