மலேசிய விமானமொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 295 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் எல்லைப்பகுதியில் உக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது. கோலாலம்பூரிலிருந்து அம்ஸ்டாம் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்.17 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக மலேசிய விமான சேவை அறிவித்துள்ளது. இதேவேளை, கிழக்கு உக்ரேய்ன் பகுதியில் விமானம் வெடித்து சிதறியுள்ளதாக மொஸ்கோவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக...
வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று (17.7.14) நாட்டிவைக்கப்பட்டது. வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் இன்று காலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. சிவபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகள், வவுனியா சட்டத்திரணிகள் சங்க தலைவர் க. தயாபரன், ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோரும் கலந்து...
  குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத பிணக்குகள் பிரிவு அதிகாரிகள் தம்மை துன்புறுத்தியதாக 28 வயதான சஞ்சீவ எதிரிசிங்க என்ற நபர் குற்றம் சுமத்தியுள்ளார். மாதம்பை செம்புகட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் சஞ்சீவ உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கடந்த மே மாதம் 9ம் திகதி சந்தேகத்தின்...
யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உயர்மட்ட நடவடிக்கை எடுக்கப்படும், படையினர் மக்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் என கூட்டமைப்பினர் உறுதி மொழியும் வழங்கியுள்ளனர். இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் ஈ.சரவணபவன்...
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போயுள்ளவர்களை மீட்டுத்தரும்படியும் வேண்டியும், வவுனியா காளிகோவிலில் தேங்காய் உடைத்து நடத்தப்பட்ட பிரார்த்தனையின்போது உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு, கதறி அழுது வேண்டுதல் நடத்தினர்.  சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு...
மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கையின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று வியாழக்கிழமை வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது அதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின் இன்று இலங்கையில் துரிதமாக கட்டடங்கள், வீதிகள் என...
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலொசனை வழங்க மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். வெளிநாட்டு நிபுணத்துவ ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்த விசரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ கருதுவதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களின் ஆலொசனைகள், அனுபவங்கள் வழிகாட்டல்கள்...
யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்! யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன அவற்றல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமை தொடர்பாகவும், வடமாகாண சபையைக் குறை கூறியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சுவரொட்டிகளில் எவரும் உரிமை கோரப்படவில்லை. அநாமதேய வசனங்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.  
காதலிக்கும் போது சில பெண்கள் தங்களது காதலர்களை எரிச்சலடைய செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம். கேள்வி மேல் கேள்வி ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு குடைந்தால் ஆண்கள் எரிச்சலடைவார்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்க ஒரு உறவில் பெண்கள் இப்படி செய்வது வாடிக்கையான ஒன்றே. சொன்னதையே சொல்வது சில...
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட OnePlus One ஸ்மார்ட் கைப்பேசியின் தொடுதிரையில் கோளாறுகள் காணப்படுவதாக பயனர்கள் முறையீடு செய்துள்ளனர்.அதாவது தொடுதிரையின் கீழ்ப் பகுதியில் மஞ்சள் போன்ற இலேசான நிறம் தோன்றுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் இந்த ஸ்மார்ட் கைப்பேசியினை தயாரித்த நிறுவனம் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், இதற்கான தீர்வு விரைவில் முன்வைக்கப்படும் என தொடர்ந்தும் பயனர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.