இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த...
தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதா அல்லது இலங்கையே வைத்துக்கொள்வதா என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.   குரங்கு அப்பம் பிரிக்கிற கதை காரணமில்லாமலே ஞாபகத்திற்கு வருகிறது. சடுதியான மறதியில் வீழ்ந்து மக்கள்தான் வாக்களித்துத் தொலைக்கிறார்கள் என்றால், அரசியல்வா ிகள் அவர்களுக்குமேல் வரலாற்று...
**கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்** கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள் TPN NEWS
வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம் வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த சுற்றறிக்கை தமது அடிப்படை உரிமையை மீறுவதாக, வடமாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மாகாண  பிரதம செயலரின்...
2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஜென்ரின அணியை வெற்றி கொண்டதன் மூலம், நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியனாக மகுடம் சூடியது. றியோ டி ஜெனீரோவிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடொன்றில் உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்த முதலாவது ஐரோப்பிய அணியாக ஜேர்மனி வரலாற்றில்...
திடீரென செல்வந்தர்களாக மாறிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் 10, 15 மற்றும் 50 லட்ச ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவியளிக்கிறது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் செய்து கொள்ளப்பட்டது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாää உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உடன்படிக்கையின் கீழ் இந்;திய அரசாங்கம் இரண்டு பீடங்களுக்குமான செயன்முறை உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக்...
ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். அமெரிக்காவில் விடுதலைப் புலிகளின் லட்சக்கணக்கான வாக்குகள் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் வாக்குகள் மூலமே அங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது...
மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமித்துள்ளதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது, இனங்களுக்கிடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, மேலும் மேலும் குரோதத்தையும், இன முரண்பாடுகளையுமே தோற்றுவிக்கும் என்று கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் குறிப்பிட்டுள்ளார். மங்கள சமரவீர...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டு;ம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதனை வலுவிழக்கச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க எதிர்க்கட்சிகள் எடுத்து வரும் முயற்சிக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவான நோக்கமொன்றுக்காக அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக்...