பொதுமக்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விளக்கமளிக்க அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த மூவருக்கும் எதிராக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் முன்னால் பலரும் சாட்சியமளித்துள்ளனர். இதன்போது டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையானுக்கு தமது பிள்ளைகளின் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்தே...
“இந்தியாவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம்கள் செயற்படமாட்டார்கள்” இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம் இலங்கை முஸ்லீம்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை ஒருநாளும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசில் இருக்கும் ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் (ரவுப் ஹக்கீம், ஏ எச் எம் ஃபௌசி, ரிஷாத்பதியுதீன், பஷீர்...
தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் மற்ற விருது விழாக்கள் போல் இல்லாமல், திறமைக்கு மதிப்பளித்து விருது வழங்கியுள்ளனர். அதன் விபரங்கள் பின் வருமாறு..... சிறந்த நடிகர்-அதர்வா(பரதேசி) சிறந்த நடிகை- நயன்தாரா(ராஜா ராணி) சிறந்த இயக்குனர்- பாலா(பரதேசி) சிறந்த படம்- தங்கமீன்கள் சிறந்த இசையமைப்பாளர்-ஏ.ஆர்.ரகுமான்(கடல்) சிறந்த நடிகர்(critics)-தனுஷ்(மரியான்) சிறந்த பாடலாசிரியர்- நா. முத்துக்குமார்(தங்கமீன்கள்) சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீ ராம் பாரத்தசாரதி(ஆனந்த யாழை) சிறந்த பின்னணி பாடகி- ஷக்தி ஸ்ரீ( நெஞ்சுக்குள்ள) சிறந்த ஒளிப்பதிவாளர்-...
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டையே கலக்கியவர் பிரகதி. இதை தொடர்ந்து இவர் பரதேசி, வணக்கம் சென்னை போன்ற படங்களில் பாடினார். மணிரத்னம், கௌதம் மேனன் போன்ற இயக்குனர்கள் சொல்லியும் நடிக்க மறுத்த இவர், இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்க அழைத்தாராம். முதலில் யோசித்த இவர் பின்பு பாலாவின் மீது கொண்ட நம்பிக்கையால் நடிக்க சம்மதித்துவிட்டாராம். தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா. ஜீன்ஸ், டீ சர்ட் , பெரிய கூலர்ஸும் அணிந்திருந்ததால், இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். நீண்ட நேரமாக விஐபி பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நின்றதால் போலிஸார் சந்தேகப்பட்டு, அடையாள அட்டையை காண்பிக்க சொல்ல, பின்பு த்ரிஷா என்று தெரிந்ததும் பாதுகாப்பு...
அன்ரொயிட் இயங்குதள மென்பொருளை உருவாக்கிய கூகுள் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த மூன்று ஸ்மாட்போன் நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது.Android One என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோ-மக்ஸ், கார்பன், ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்கள் கூகிளுடன் இணைந்துள்ளன. இந்தியாவில் சுமார் 100 டொலர்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை உருவாக்குவது இவற்றின் நோக்கமாகும். புதிய கையடக்கத் தொலைபேசிகள் விலையில் குறைந்தவையாக இருப்பதுடன், அவற்றில் மென்பொருள் சார்ந்த பிரச்சனைகளும் இருக்காதென கூகிள் மேலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். சமீபத்தில் அமெரிக்காவின்...
20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியது என்பதால் இறுதிப்போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணிகள்...
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று 5–வது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்தது.ஹமாஸ் தீவிரவாதிகளின் 1100 நிலைகளின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியுள்ளது. அதில் அவர்கள் ராக்கெட் குண்டுகளை ஏவும் இடங்கள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, அவற்றை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு மற்றும் காமாண்டர் மையங்கள் போன்றவை அடங்கும். அவை...
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரப் கனியும் முன்னிலை பெற்றிருந்தபோதும் யாருக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. எனவே கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் பூர்வாங்க முடிகள் கடந்த 7ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.முதல் சுற்றில் இரண்டாமிடத்தில் இருந்த...
மத்திய கிழக்கு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை அங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாக அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.போராளிகள் கைப்பற்றியுள்ள சில பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்காக அரசுத் துருப்புகளும் முழுமூச்சுடன் போரிட்டுவர நாடு முழுவதும் குழப்பமான சூழல் நிலவிவருகின்றது. இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சயோயுனா குடியிருப்பு வளாகத்தில் நேற்றிரவு ஆயுதமேந்திய...