இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் அம்லா பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக பீட்டர்சன்- எல்கார் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ளையாடினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 11.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அந்த அணி 70 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பீட்டர்சன் 46 பந்தில் 34 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து...
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது.
அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும்...
கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில்
17முதல்20 வரை நடைபெறுகிறது தினமும் மாலை 5மணிக்கு பிசாசின் பிடி; பாவம் .மதுபானம்
பில்லிசூனியம். கொலை .இன்னும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து இயேசு விடுவிக்கிறார்
சமாதானம் சந்தோசம் பாவமன்னிப்பு தருகிறார் வாருங்கள் கேளுங்கள் அனுபவியுங்கள்
TPN NEWS
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னிச்சையாக வேலை செய்யாது, மக்களுக்கு கூடிய பிரயோசனம் கிடைக்கும் வகையில் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் இணைந்து உரிய திட்டத்தின் ஊடாக தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று...
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு;ள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்தது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானம்...
இலங்கையில் நல்லிணக்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முதன்மையானது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜென் போல் மொன்சுவா (துநயn-Pயரட ஆழnஉhயர) தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் நண்பர்கள் என்ற ரீதியில் நல்லிணக்கம் குறித்து பிரான்ஸூம், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீளவும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்க வேண்டுமாயின் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம்...
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற குறுகிய கால நிகழ்வின் போது இந்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அமெரிக்காவுக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள பிரசாத் காரியவசம் ஒபாமாவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார்.
இந்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் வெள்ளைமாளிகை விருந்தினர் புத்தகத்தில் தமது கருத்தை பதிவுசெய்த...
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது! - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கவில்லை: விக்னேஸ்வரன் - தெளிவாக கூறவில்லை சிவஞானம்
ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதில் விக்னேஸ்வரனும் உள்ளடங்குகிறார்.
எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது...
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதம் விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறல்ல
Thinappuyal News -
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்...
சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி, சர்வதேசரீதியாக போர்க்குற்றத்தை மையமாக வைத்து நகரும் வலையிலிருந்து தப்பும் முகமாக, சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை மாட்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்ததென்ற குற்றச்சாட்டில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை நோக்கி பொறிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
53ஆவது படையணியின் 8 விசேட படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் மேஜர் ஜெனரல் கமால்...