கத்தோலிக்க திருச்சபை மத பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடுகளை ஆக்கிரமிக்கவோ, மக்களை கொலை செய்யவோ இல்லை என கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் இலங்கை பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தனிப்பட்ட பிரபலத்திற்காக பொது மக்களின் மனதை...
யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பல்களைக் கையளிக்கும் வைபவத்தையடுத்து இடம்பெற்ற சந்திப்பின் போதே அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் மொரிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது புகலிடம் கோரி சட்ட விரோதமாக படகுகளில் பயணிப்போரைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு...
என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிநாடுகளில் இருக்கின்ற கொழுத்த உடல்களைக் கொண்டுள்ள சில முஸ்லிம்கள் எஸ்.எம்.எஸ். ஊடாகவும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாகவும் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்துகின்றனர். இத்தகைய அலுகோசுகளும் எமது சமுதாயத்தில்தான் இருக்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்துகிறேன். ஒருபோதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கமாட்டேன். அவ்வாறாக என்னை...
ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் நிலவரம் குறித்து நேட்டோ படைகளின் பொதுசெயலாளருடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேட்டோ படைகளின் பொது செயலாளர் ஆண்டர்ஸ் போக் சந்தித்து பேசினார். ஒபாமா மற்றும் ஆண்டர்ஸ் சந்திப்பின் போது, உக்ரைன் விவாகரம் மூலமாக ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா சவாலாக விளங்குவது குறித்தும், ஆப்கானிஸ்தானில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக...
ஒரு வருடமாக ஒரே படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள், ஷங்கர், பாலா போன்ற இயக்குனர்களின் படங்கள் வருடக்கணக்கில் தயாராவது உண்டு. ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிடுவார்கள். திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட  பெரும்பாலான ஹீரோயின்கள் இப்படித்தான் இதுவரை நடித்து வருகின்றனர். ஆனால் தற்போது அனுஷ்கா இதிலிருந்து விதிவிலக்காகி இருக்கிறார். தமிழ், தெலுங்கில்...
அலியாபட்டை மணந்துகொள்ள ஏராளமானவர்கள் அவர் வீட்டு எதிரில் காத்திருக்கின்றனர். பாலிவுட் இளம் நடிகை அலியா பட். இவருக்கும் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கும் காதல் என்று பரவலாக பேசப்படுகிறது. இதை இருவரும் உறுதியும் செய்யவில்லை. ஆனால் அவ்வப்போது வருணை நான் லவ் பண்றேன் என்று தன்னிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களிடம் ஜோக் அடிக்கிறார் அலியாபட். இந்நிலையில் வருண் ஹீரோவாக நடிக்கும் ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற இந்தி...
1 ஷூட்டிங்கிலிருந்து லீவு எடுக்க முயன்றதை தடுத்த ஹீரோ மீது கடுப்பானார் சமந்தா. டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆருடன் ஏற்கனவே 2 படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா தற்போது ரபஹாஸா என்ற படத்தில் அவருடன் நடித்து வருகிறார். சொந்த விஷயம் காரணமாக சமந்தா 3 நாள் விடுமுறை வேண்டும் என்று பட இயக்குனரிடம் கேட்டார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட ஹீரோ ஜூனியர் என்டிஆர் கோபம் அடைந்தாராம்.இந்நிலையில்...
பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 5 லட்சம் கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட்ட மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை உண்டு பண்ணும். 1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறான கழிவுப் பொருள் மோதியதால் சேதமுற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின்...
போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது. ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர் ஒரு விமானம் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த இரண்டு பேரும் உடல் கருகி இறந்தனர். மற்றொரு விமானம் விழுந்து சேதமடைந்தபோதும், அதில் இருந்த இரண்டு...
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பேரேராவும், தில்ஷனும் களமிறங்கினர். போட்டி தொடங்கியதிலிருந்து பந்தை சந்திக்க சிரமப்பட்ட பெரைரா 17 பந்துகளில் 7 ரன்கள் குவித்தார். பின்னர்...