ஓடும் ரெயிலில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் தாய்லாந்து நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான சுரட் தனி-யில் நோய்வாய்பட்டு கிடக்கும் பாட்டியை பார்த்து நலம் விசாரித்து விட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைநகர் பாங்காக் செல்லும் ரெயிலில் தனது சகோதரிகளுடன் அந்த சிறுமி திரும்பிக் கொண்டிருந்தார். நீண்ட தூரமுள்ள அந்த பயணத்திற்கிடையில், கடந்த சனிக்கிழமை இரவு ரெயிலின் ‘பெர்த்’களில்...
அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை ‘பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது.டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால், வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி, நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே, போய் சேர வேண்டிய நேரத்தை...
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் போராளிகள் கை ஓங்கியுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் உள்ள மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா, பாய்ஜா உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. சிரியா மற்றும் ஈராக்கில் பிடித்த பகுதிகளை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற புதிய நாட்டை போராளிகள் உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமிய நாடு பகுதியில் உள்ள மொசூல் நகரில்...
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று வருகிறார். இதன் ஒரு கட்டமாக, கம்போடியா நாட்டில் உள்ள கம்ப்போங் ஸ்பியு பகுதியில் அமைந்துள்ள ஃப்னோம் அவுரல் மலையின் மீதுள்ள மிக உயர்ந்த சிகரத்தில் கடந்த வாரம் ஏறினார். சிகரத்தில் இருந்து கீழே இறங்கி வரும் போது,...

பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 400 தீவிரவாதிகள் பலி பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் தலிபான், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகள் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அடிக்கடி தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். கடந்த மாதம் கராச்சி விமான நிலையத்தில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 29 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து வடக்கு வசிரிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள்...
சோமாலியா அதிபர் மாளிகை சுற்றுச்சுவர் மீது இஸ்லாமிய போராளிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுகள் நிரப்பிய காரில் வந்த போராளிகள் சுற்றுச்சுவரில் காரை கொண்டு மோதியதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த படையினர் காரில் வந்த ஷபாப் இயக்கப் போராளிகள், ஐந்து பேரில் மூவரை சுட்டுக்கொன்று அதிபருக்கு ஆபத்து நேராமல் தடுத்துவிட்டனர். மீதமுள்ள இருவர் சுற்றுச்சுவரில் கார் மோதிய போது நடந்த...
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனிவாசனின் தேர்வு குறித்து என்னிடம் கேட்டால் இது மிகவும் சரியான தேர்வு என்றுதான் சொல்வேன். ஐ.பி.எல். ஊழல் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது சீனிவாசன் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதாவது சுப்ரீம் கோர்ட் அவர் போட்டியிட மறுப்பு தெரிவிக்காத நிலையில் அவர் ஏன்...
பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முடிந்த முதல் அரை இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை 7-1 என்ற கணக்கில் துவம்சம் செய்தது. இத்தோல்வி குறித்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் கூறியதாவது:- ஜெர்மனியிடம் பிரேசில் தோற்றது என் வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இது மிகவும் பேரழிவானதாகும். பிரேசில் அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றதும் இது கடினமாக வேலை என்பது எனக்குத் தெரியும்....
நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பட்லர், நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 19 இருவது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என்ற 32 வயதே ஆன பட்லர் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு கவலைதான் என்றாலும், உணர்ச்சிபூர்வமான நேரம். அடுத்து...
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். 2013-ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் 102 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்...