பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் நெருப்பை வெளியே கொடுத்து, வெளி நெருப்பை உள்ளே கொண்டு வந்து முழு நாட்டையே தீக்கிரையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். பௌத்த மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான தகவல்களை இணையத்தில் பிரசுரித்து உலக நாடுகளில் பிரசாரம் செய்யும் முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர். பல வருடங்களாக...
தமிழில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே. பாலசந்தர், தெலுங்கில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே.விஸ்வநாத் இருவரும் 'உத்தம வில்லன்' படத்தில் நடித்துள்ளார்கள். கே. விஸ்வநாத், தமிழ், தெலுங்கில் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். கே. பாலசந்தர் 'ரெட்டைச் சுழி' என்ற படத்தில் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இந்த இரு சிறந்த இயக்குனர்களும் முதன் முறையாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த இரு இயக்குனர்களுமே...
ஜகார்தா :இந்தோனேஷியாவில், 120 எரிமலைகளில் ஒன்றான, 'மவுண்ட் சினாபுங்' வெடித்து சீறியதால், 4,000 மீட்டர் உயரம் வரை, எரிமலைக் குழம்பு எழுந்தது.இதுகுறித்து, ஷின்குவா பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் உள்ள இந்த எரிமலை, 400 ஆண்டுகளாக உறங்கிய நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், மீண்டும் சீற்றம் கொண்டது.அவ்வப்போது, ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால், 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 30 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து...
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிரான போர் பிரகடனத்தை, தனி இஸ்லாமிய நாட்டின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார். இதனால், ஈராக்கில் சிக்கியுள்ள நுாற்றுக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 2002ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த, சதாம் உசேனின் ஆதரவாளர்களான, 'இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா...
சில வாரங்களுக்கு முன்னர் Samsung Galaxy S5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த சம்சுங் நிறுவனம் தற்போது Samsung Galaxy S5 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளது.இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு 1280 x 720 Pixels Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இது தவிர 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Exynos 3470 Processor...
முன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத்தம் புதிய iPod Touch சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.Rear Facing Camera கமெரா உட்பட முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPod Touch சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் மூன்று வகையான சேமிப்பு கொள்ளளவினை கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.16GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட இப்புதிய சாதனத்தின் விலை 159 பவுண்ட்ஸ்களாகவும், 32GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட சாதனத்தின் வலை 199 பவுண்ட்ஸ்களாகவும்,...
பாகிஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் வடக்கு வசிரிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாக செயல்பட்டு வருகின்றது. கடந்த மாதம் கராச்சி விமான நிலையம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகின்றன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை காலி...
ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நாட்டின் உயர்மட்ட அதிபர் பதவிக்கு எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இவர்களில் ஒருவரும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை. அதனால் இந்த முடிவுகளின் முன்னணியில் இருந்த அப்துல்லா அப்துல்லா, அஷ்ரப் கனி அஹமதுசாய் ஆகிய இரண்டு வேட்பாளர்களிடையே இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு கடந்த ஜூன் மாதம் 14ஆம்...
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியரான ட்ரேசி எமின் கடந்த 1998ஆம் ஆண்டில் வரைந்த 'மை பெட்' என்ற ஓவியத்தை அங்குள்ள தொழிலதிபரான சார்லஸ் சாட்சி என்பவர் கடந்த 2000ஆவது ஆண்டில் 1,50,000 பவுண்டிற்கு வாங்கினார். நவீனகால பாணியாகக் கருதப்படும் இந்த ஓவியத்தில் கசங்கிய படுக்கை உறை, வீசி எறியப்பட்டிருந்த சிகரெட் துண்டுகள், உள்ளாடைகள் போன்றவை வரையப்பட்டிருந்தன. போருக்கு பிந்தைய மற்றும் சமகாலப் படைப்புகள் என்ற பிரிவில் நேற்று இந்த ஓவியத்துடன் சேர்த்து...
கென்யாவில் சரக்கு விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த நான்கு பணியாளர்கள் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. போக்கர் 50 என்ற அந்த சரக்கு விமானம், நான்கு பணியாளர்களுடன் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சிறு வணிக வளாகம் ஒன்றின் மீது...