உக்ரைனின் கிழக்கு பகுதியான டன்ட்ஸ்க்கை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் அல்லது ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்த உள்நாட்டு போரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் படி அப்பகுதியில் கடந்த 27-ந்திகதி வரை போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் உக்ரைன் அரசு ஐரோப்பிய யூனியனுடன் நேற்று...
ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் தாக்குதல்களாலும், தொடர் வெற்றிகளாலும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசு தத்தளித்து வருகிறது. போராளிகளை எதிர்கொள்ள முடியாமல் அரசு படைகள் பின்வாங்கி வருகின்றன. போராளிகள் மீது தாக்குதல் நடத்துமாறு பிரதமர் நூரி அல் மாலிக்கி கேட்டுக்கொண்டபோதும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இதில் அதிரடி நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். ஈராக்கில் புதிய அரசை அமைக்க வேண்டும் என்பதுதான்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது. ஆட்டத்தின் துவக்க நேரத்தில் இருந்தே பந்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கொலம்பிய வீரர்கள், உருகுவே அணியின் கோல் கனவு நிறைவேறாத வகையில் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை தங்களுடையதாக்கிக் கொண்டனர். இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் முதன்முறையாக கொலம்பியா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலுடன் சிலி அணி மோதிய விறுவிறுப்பான ஆட்டம் இன்று போலோஹாரிசோண்ட்டில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணியும், போட்டிகளை நடத்தும் நாடு என்ற முறையில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரேசில் அணியும் தத்தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் விளையாடின. ஆட்டத்தின் முன்பாதி நேரத்துக்குள் முதல் கோலை பிரேசில் பதிவு செய்ய, அதற்கு பதிலடியாக சிலியும் தனது...
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் சி பிரிவில் விளையாடிய கானா அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது. இந்த வீரர்கள் தங்களின் சம்பளம் குறித்த வேலை நிறுத்தத்தில் இறங்கினர். மேலும் இந்த அணியின் இரண்டு வீரர்கள் கீழ்ப்படியாமை காரணமாக காலவரையறையின்றி நீக்கப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை அன்று போர்ச்சுகல்லுடன் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கணக்கில் கானா தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது....
ஸ்ரீபிரியா டைரக்டு செய்வாரா என்று சந்தேகப்பட்டார் நதியா. 90களில் ஹீரோயினாக வலம் வந்த நதியா தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது ஸ்ரீபிரியா இயக்கும் திரிஷ்யா என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: அமைதியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த எனக்கு திரிஷ்யா படத்தில் அதிகார...
பிரியாமணியின் ரகசிய காதலன் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்திவீரன், தோட்டா, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர் தமிழ் படங்களில் கவனத்தை குறைத்துக்கொண்டு மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டு சாருலதா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இந்நிலையில் பிரியாமணி காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் தனது...
அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒரு பகுதி என சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தெற்கு திபெத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என்று சீனா கூறியுள்ளது. முற்றிலும் இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை தொடர்ந்து சொந்தம்...
100 பேர் கதி என்ன? மீட்புப்பணி தீவிரம் சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வந்த 'ட்ரஸ்ட் ஹைட்ஸ்' என்ற அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம் ஆனது.100-க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரும் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் ஆவர். சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று...
இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கம் என லாம். காரணம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து சனல் 4 ஊடகம் இலங்கை விவகாரம் தொடர்பாக அக்கறை காட்டிக்கொண்டிருக்கிறது. கையடக்கத் தொலைபேசிகளுடாக இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட புகைப்படங்களையே சனல் 4 ஊடகமா னது இலங்கையரசிற்கெதிரான போர்க்குற்ற...