உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன. நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டியது தான். இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி...
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை சந்தித்தார்.அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் இரு செட்டை வென்று 3-வது செட்டில் ஆடிய போது தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயமடைந்தார். பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை ஒரு போதும் இல்லாத அளவுக்கு மாற்று ஆட்டக்காரர்கள் (சப்ஸ்டியூட்ஸ்) அதிக கோல்கள் அடித்து சாகசம் புரிந்து இருக்கிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவுடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தது. 48 லீக் ஆட்டங்களில் மொத்தம் 133 கோல்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் மாற்று ஆட்டங்களில் பங்களிப்பு 18 சதவீதமாகும். அதாவது மாற்று ஆட்டக்காரர்களாக களம் கண்டவர்கள் இதுவரை 24 கோல்களை பதிவு செய்து இருக்கின்றனர்....
அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் சிட்டியில் 2014-ம் ஆண்டிற்கான முதல் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு 30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு 10 டன் மணலும் கொடுக்கப்பட்டு 'சேவ் ட்ரீ சேவ் தி பியூச்சர்' என்ற தலைப்பில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதில் மக்களின் விருப்பத் தேர்வில் அதிக வாக்குகள் பெற்ற சிற்பத்திற்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப்...
தென்அமெரிக்க சோஷியலிச நாடான வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட மின்சார செயலிழப்பு நாட்டின் 23 மாநிலங்களில் ஒன்பதைப் பாதித்தது. போக்குவரத்து மற்றும் பொது அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பாதித்த இந்த இருட்டடிப்பு அந்நாட்டின் அதிபர் பங்கு பெற்ற ஒரு தொலைக்காட்சி விழாவையும் பாதித்தது. அதிபர் மாளிகையில் நிக்கோலஸ் மதுரோ பத்திரிகையாளர்களுடன் பங்கு பெற்றிருந்த விழா ஒன்று இதனால் தடைப்பட்டது. நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் மின்உற்பத்தி நிலையத்தில் நேற்று...
பாகிஸ்தானில் போராளிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு வசிரிஸ்தானி ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போராளிகளின் மறைவிடம் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படுவதால் அங்கிருந்து சுமார் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் தர்காமண்டி, சாஷ்மா காவோன் ஆகிய பகுதிகளில் போராளிகளின் மறைவிடம் மீது இன்று ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில், 6 வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 17 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 370 போராளிகளும், 12 பாதுகாப்பு...
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில், ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் கேட்ட போது அவர் இதனை கூறியதாகவும்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயமடைந்துள்ளர். நள்ளிரவு 12.30 மணியளவில் தாழங்குடாவில் உள்ள அரசி ஆலைக்கு முன்பாக வானும் எல்வ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தில் கலந்துகொண்டு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக...
  அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் அரசியலில் இது எல்லாம் சகஜம் வருங்கால ஜனாதிபதிக்கான சமிக்கைகள்-நாமல்ராஜபக்ஷ மதங்களுக்கு இடையே விசுவாசத்தை மேம்படுத்தும் வகையில் அமபாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களும் பேதங்களை களைந்து ஒன்றாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கடின முயற்சியின் ஊடாக ஈட்டப்பட்ட சுதந்திரத்தை தக்க...
  நீதித்துறையில் மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது -- சி.வி.விக்னேஸ்வரன் அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும் வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித் தருமாறு கோரி வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள்...