உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சுப்பர் கம்பியூட்டர்களில் சீனாவின் Tianhe-2 கணனியே தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுகின்றது. சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தில் காணப்படும் இக்கணினி 33.86 petaflops/s எனும் வேகத்தில் செயலாற்றக்கூடியதாக இருக்கின்றது. முதன்மையான 500 சுப்பர் கம்பியூட்டர்கள் தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் 63 தொடக்கம் 76 வரையான கணினிகள் சீனாவிலும், பிரித்தானியாவில் 30 கணினிகளும், பிரான்ஸில் 27, ஜேர்மனியில் 23, ஜப்பானில் 30 கணினிகளும் காணப்படுகின்றன.
  பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்கள் முதியவர் ஒருவரை தாக்கியும், ஒழுங்காக பராமரிக்க மறுத்ததற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வடக்கு சோமர்சடில் உள்ள முதியோர் இல்லத்தில் க்ளேடிஸ் ரைட் (79) என்ற மூதாட்டி டேமென்சியா நோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார். இவரை பாதுகாக்கவும், உதவிகளை செய்யவும் மூன்று இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், டேனியல் பேன்ஸ் (25), தாமஸ் (24) மற்றும் சால்னிகோ ஆகிய மூன்று இளைஞர்களும் மூதாட்டியின் கழுத்தை...
  அவுஸ்திரேலிய செய்தியாளர் பீற்றர் கிரெஸ்தே உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களுக்கு எகிப்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தவறான செய்திகளைப் பரப்பினார்கள் என்பதும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்தார்கள் என்பதும் மூவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் கிரெஸ்தேயிற்கு ஏழு வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அவருடன் அல்ஜெஸீரா செய்தி ஸ்தபானத்திற்காக வேலை செய்த பஹர் மொகம்மத் என்பவருக்கு பத்து வருடகாலமும், மொஹம்மட் ஃபவுமி...
போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன். சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் வேறும் வழிகள் இருந்திருக்கலாம்.  இறுதிக் கட்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சில உளவியல் காரணிகளையும் அரசியல் காரணிகளையும் கருத்திற்கொள்ளவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட...
ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்க வல்ல பதில் ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளின் சோதனை கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் அவை இதுவரை வெற்றிகரமாக அமையவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன்படி நடுத்தர ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் போலி ஏவுகணை ஒன்றை, கலிபோர்னியா விமானப்படை தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட...
  பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் கடைசி இரண்டு லீக் ஆட்டங்கள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன.  இதில் சாவ்பாலோவில் நடந்த ஆட்டத்தில் தனது 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட நெதர்லாந்து–சிலி அணிகள் மோதின. ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடிப்பது என்பதற்கான ஆட்டத்தில் ஆட்டம் தொடக்கம் முதலே நெதர்லாந்து மற்றும் சிலி அணி வீரர்கள் கோல்...
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய அணித்தலைவர் டோனிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது டோனி விஷ்ணு அவதராத்தில் உள்ள புகைப்படம் ’பிசினஸ் டுடே’ பத்திரிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ’கடவுளின் பெரிய ஓப்பந்தங்கள்’ என்ற பெயரில் வந்தது. இந்த படத்தினால் தான் பிரச்சனை வெடித்தது. அட்டைப்படத்தில் வந்த அந்த புகைப்படத்தில் டோனியின் பல கைகளில் லேஸ் சிப்ஸ், பூஸ்ட் பாக்கெட், கோக், ஷூ உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன. அந்த படம் கடவுள் நம்பிக்கையை...
  இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும். நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 55 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தனது தொடர்ச்சியான 7 ஆவது அரை சதத்தினை பெற்றார். இதற்கு முன்னர் இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகளின் வீரர்களான எவர்டென் வீக்ஸ் (Everton Weekes),...
  ஜேர்மனி- கானா போட்டியின் போது நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டை இல்லாமல் உடல் முழுவதும் பச்சை குத்திய நிலையில் நுழைந்த அவரால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அவரது உடம்பில் எச்எச் என்றும் எஸ்எஸ் என்றும் எழுதப்பட்டிருந்தது. எச்எச் என்றால் ’ஹெய்ல் ஹிட்லர்’ அதாவது ’வாழ்க ஹிட்லர்’ என்று பொருள். அதேபோல நாஜிக்களின் புற ராணுவப் படையைக் குறிக்கும் வாசகம் தான் இந்த எஸ்எஸ். மேலும் அவரது உடலில்...
பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன.குரிடியாவில் நடைபெற்ற சம்பிரதாய ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த அவுஸ்திரேலியா–ஸ்பெயின் அணிகள் சந்தித்தன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 3–0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றியுடன் தனது பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்று வெளியேறியது. ஸ்பெயின் அணியில் டேவிட் வில்லா 36–வது நிமிடத்திலும்,...