கவர்ச்சி வேடம் எடுபடாததால் அப்செட்டாகி குணசித்ர வேடத்துக்கு மாறினார் கார்த்திகா. கோ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார். தற்போது டீல், புறம்போக்கு ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். தொடக்கத்தில் கவர்ச்சி ஹீரோயினாக முயன்ற கார்த்திகாவுக்கு அது கைகொடுக்கவில்லை. அன்னக்கொடியில் கிராமத்து பெண்ணாக நடித்தார். அடுத்தடுத்து நடிக்கும் படங்களிலும் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் வேடம் ஏற்றிருக்கிறார். தெலுங்கிலும் ஏற்கனவே 2 படங்களில் கிளாமர் ஹீரோயினாக...
கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி. தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார். இதற்கிடையில் கமலுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட கவுதமிக்கு கமல் உறுதுணையாக இருந்ததுடன் தகுந்த சிகிச்சை அளித்து நோயிலிருந்து...
  இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் காதல் சைக்கோ கதையாக உருவாகிறது அழகன் முருகன். புது இயக்குனர் மூனா டைரக்ஷன். படம்பற்றி அவர் கூறும்போது,காதலில் தோற்றவர்கள் மிருகத்தனம் கொண்ட சைக்கோவாகி விடுவது உண்டு. அதுபோல் மாறும் ஒரு இளைஞனின் மனதுக்கு உருவம் கொடுத்து அது நடமாடினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை திரைக்கதையாக அமைத்திருக்கிறேன். சசி கார்த்திக், மனோ முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆந்திராவை சேர்ந்த சவுமியா, கேரளாவை சேர்ந்த...
டெல்லியை சேர்ந்த ஆங்கில நாடக நடிகையை தமிழ் வசனம் பேசி நடிக்கவைக்க படாதபாடுபட்டார் இயக்குனர். நவீன் சந்திரா, சலோனி லுத்ரா, நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் சரபம். அருண் மோகன் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது: சரபம் என்றால் என்ன என்கிறார்கள். சிங்க முகமும், பறவை உடலும் கொண்ட ஒரு மிருகத்தின்பெயர்தான் சரபம். இது பண்டை கால புராண கதைகளில் வரும். சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. 3...
சினிமாவில் வழிகாட்ட எனக்கு காட் பாதர் கிடையாது. எனவே டாப் இடத்தை அடைய முடியவில்லை என்றார் சதா. சதாவை ஞாபகம் இருக்கிறதா? ஜெயம் படத்தில் அறிமுகமானவரேதான். பாவாடை, தாவணியில் அறிமுகமாகி இளவட்டங்களை கவர்ந்தவர் அடுத்த படத்திலேயே அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்து ஷாக் கொடுத்தார். அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல்போனார். தெலுங்கு, மலையாளத்துக்கு போனார்....
தென் கொரியாவில் கோசியாங் நகரம் வட கொரியா எல்லையில் உள்ளது. இங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளளர். இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த தென்கொரிய ராணுவ வீரர் ஒருவர் உடன் பணிபுரியும் மற்ற வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். எதற்காக அவர் மற்ற வீரர்களை...
ஈராக்கில் அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சதாம் உசேனின் சன்னி பிரிவு முஸ்லிம் ஆட்சி வீழ்ச்சி அடைந்து ஷியா பிரிவு முஸ்லிம் ஆட்சி அமைந்தது. புதிய அரசு சதாம் உசேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கில் போட்டது. இதனால் சதாம் உசேன் ஆதரவாளர்களும், அவரது படையில் இருந்தவர்களும் தீவிரவாதிகளாக மாறி ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈராக் தீவிரவாதிகளுக்கு சிரியா தீவிரவாதிகளும் ஆதரவு அளித்து ஐ.எஸ்.ஐ.எஸ்....
ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள மொசூல் நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்திய தொழிலாளர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். 40 தொழிலாளர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மொசூல் புறநகரில் உள்ள பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் 40...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சைதமா என்ற இடத்தில் உள்ள ‘ரோபோ’ (எந்திர மனிதன்) தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் அபே பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்படும் பலதரப்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை ரசித்தார். பின்னர் அங்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வருகிற 2020–ம் ஆண்டில் டோக்கியோவில் 32–வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் அறிவியல் வளர்ச்சி சார்ந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். அந்த வகையில் முதன்...
பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ் சமன் செய்தார். கானாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 71–வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் 2002, 2006, 2010 ஆகிய 3 உலக...