வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டக்குழுவில் இடம் பிடித்திருந்த மாணவன் குண்டு காயங்களுடன் பிணமாக காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குற்றவியல் நடைமுறை சட்டம் கருத்துக்களக் குழுவின் தலைவரான அல்ப்ரெடோ ரோமெரோ கூறுகையில், ஜோசு பாரியஸ் என்பவர் மரகைபோ நகரின் மேற்கு பகுதியில் கடந்த மே 29ந் தேதியன்று அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொண்டபோது குண்டு...
பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் இன்று பாகிஸ்தான் அரசு நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 30 பேருடன் சேர்த்து இதுவரை 260 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மாலை 5 மணியளவில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஹஸ்சு கேல் பகுதியில் மூன்று தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதியான...
புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அச்சிறுமி கீழ்க்கணடவாறு எழுதியிருந்தாள். “எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா-போஸ்னியா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து நைஜீரியா வெற்றி பெற்றது. இரு அணிகளும் முதல் பாதியில் விறுவிறுப்பாக ஆடின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நைஜீரியாவின் ஓடம்விங்கி அதிரடியான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார். முதல் பாதியில் போஸ்னிய வீரர்கள் கட்டுப்பாட்டில் 55 சதவிகித நேரம் பந்து...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி- கானா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலை செய்தன. இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்துக்கொண்டு வந்தன. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஜெர்மினியின் கோட்சே தலையால் மோதி அற்புதமான...
ஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் விராட் கோலி முதலிடத்தை இழந்தார். வங்காளதேச தொடரில் பங்கேற்காததால் முதலிடத்தை இழந்த விராட் கோலி, 868 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்வியர்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்ட் தரவரிசையிலும் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். ஷிகர் தவான் 8-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திலும்,...
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான லி சுவேருயியை (சீனா) எதிர்கொண்டார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாகப் போராடிய சாய்னா, 20-22, 15-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே தோல்வியடைந்து வெளியேறினர். தற்போது சாய்னாவும் வெளியேறியதால் இத்தொடரில்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈகுவடார் மற்றும் ஹோண்டுராஸ் அணிகள் விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமமாக உள்ளனார். இரண்டாவது பாதியில் ஈகுவடார் அணி கடுமையாகப் போராடி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் இனக்கலவரங்களில் போராளிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிகி அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று ஈராக்கிற்கு 300 ராணுவ ஆலோசகர்களை அனுப்புவதான தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்டார்.மேலும் ஈராக்கின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் ஒரு ராஜதந்திர பயணத்தில் ஈடுபடுவார் என்றும் ஒபாமா தெரிவித்தார். அதன்படி...
சிரியாவில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஐ.நா மனிதாபிமான உதவிகளைச் செய்துவருகின்றது. ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் சிரியா அரசின் அனுமதி பெற்ற பின்னரே அங்குள்ள மக்களைச் சென்று சேருகின்றது. இந்த நடைமுறையை ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் வலேரி அமோஸ் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். ஏனெனில், அரசின் அனுமதியில் விநியோகிக்கப்படும் உதவிகள் போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்குக் கிடைப்பதில்லை...