ஆசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் சமீப காலங்களாக சன்னி, ஷியா பிரிவு இன மோதல்கள் வலுத்து வருகின்றன. ஹாவ்திஸ் என்று அழைக்கப்படும் ஷியா பிரிவின் போராளிகள் சலாபி என்று அழைக்கப்படும் சன்னி பழங்குடியினரை எதிர்த்து கடந்த சில மாதங்களாகக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பழங்குடியின் இஸ்லா கட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டிலும், சலாபி ஆதிக்கத்தில் இருந்துவந்த சில பகுதிகளையும் ராணுவத்தின்...
தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ஈராக் நகரங்களை மீட்க 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தாக்குதலுக்கு தயாராக உள்ளனர். எண்ணை வளம்மிக்க ஈராக் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளது. சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா பிரிவு அரசின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ராணுவத்துக்கு எதிராக அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர். ஈராக்கின் முக்கிய பெரிய நகரங்களான மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா உள்ளிட்டவற்றை கைப்பற்றி...
    “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “ இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.” “புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து...
  ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய கிளர்ச்சி விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜிஹாத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராட சிங்­க­ள­வர்கள் தயா­ரா­க­வுள்­ளனர். நாட்டில் தமிழ்த் தீவி­ர­வா­திகள் நல்­ல­தொரு பாடத்­தினை கற்­றுக்­கொண்­டுள்­ளனர்....
தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் பகுதியாகையால் இப்பள்ளி வாசலும் புனரமைப்பட்டிருந்தது. இப்பள்ளிவாசல் அமைந்துள்ள வீதி இராணுவத்தினரின் துவிச்சக்கரவண்டி ரோந்து அணிகள்...
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர். இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். இந்நிலையில் பாணந்துறை...
  ஆவேசமாக பேசும் முஸ்லீம் மௌவி நாம் சிறுபான்மை இனம் அல்ல 160 கோடி மக்கள்
கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், மின் விளக்குகளையும் உடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து பிரதேச வாசிகள் திரண்டு சென்ற நிலையில், பொதுபல சேனா ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகவும், சம்பவம் தொடர்பில் தகவலறிந்த...
19-06-2014 இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன கூட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் தலைவர்களும் நகரப் பகுதியில் நடத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சன் அபேயவர்த்தன, “வவுனியாவில் அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அந்த அமைதியைக் குழப்ப வேண்டாம்....
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தனர். அமைச்சர் ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தில் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டினூடாகவே இலங்கையில் அமைதியும் உரிமையுடன் கூடிய வாழ்வு...