ஜனாதிபதி பேருவளையில் சற்று முன்னர் பேருவளைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மோதல்கள் நடைபெற்ற பிரதேசங்களில் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பேருவளை பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தார். பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள், முஸ்லிம் மத தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவும்...
இந்தியாவும் பிரித்தானியாவும் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அண்மையில் பதவியேற்ற பிரதமரான நரேந்திர மோடி விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் ஆராய கடந்த வெள்ளிக்கிழமை விசேட குழுவொன்றை நியமித்தமை இதன் முதல் கட்ட நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. 1991...
மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி இருந்தார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகே இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் தாயுமானவன் என்ற படத்தில் நடிக்க கல்யாணிக்கு வாய்ப்பு வந்தது. இதை கணவரிடம் தெரிவித்தபோது அவர் நடிக்க பச்சை கொடி காட்டிவிட்டாராம்....
வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறது சான்டல்வுட் திரையுலகம். தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ரேயா. படுகவர்ச்சியான வேடங்களிலும் தூள் கிளப்பினார். இந்நிலையில் ஹன்சிகா, நயன்தாரா, திரிஷா போன்றவர்களின் போட்டியில் ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் டல்லடித்தது. இதையடுத்து இந்தியில் கவனம் செலுத்தினார். அங்கும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்குபிறகு பாலா இயக்கும் கரக்காட்டக்காரர்களின் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால்...
கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்து கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் மட்டும் நடித்து வந்தார். இப்போதுள்ள போட்டியில் கவர்ச்சி காட்டாவிட்டால் நிலைக்க முடியாது என்று அவருக்கு சிலர் அட்வைஸ் செய்தனர்.   இதுகுறித்து அவர் கூறியது:நடிப்பு என்றதும் கவர்ச்சி உடை...
ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மாட்டேன்  என்றார் ஐஸ்வர்யா. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. அவர் கூறியதாவது: கிராமத்து பெண்ணாகவே நடிப்பது ஏன் என்கிறார்கள். எனக்கு வரும் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் வருகிறது. அதை ஏற்று நடித்து வருகிறேன். நிறைய படங்களில் இதுபோல் செய்துவிட்டதால் இடைவெளிவிட்டு நடிக்க எண்ணி இருந்தேன். அப்போதுதான் திருடன் போலீஸ் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்றேன்.   அதைத்தொடர்ந்து...
 தயாரிப்பாளர் தந்தையாக இருந்தாலும் அவரிடம் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது என்றார் டைரக்டர் ராஜா. நிகில், சுவாதி நடித்துள்ள படம் கார்த்திகேயன். எம்.சந்து டைரக்ஷன் செய்கிறார். வெங்கட ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார். சேகர் சந்திரா இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஜெயம் ராஜா பேசும்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது பட இயக்குனரை பாராட்டினார். எப்போதுமே தயாரிப்பாளரிடம் அப்படத்தின் இயக்குனர் நல்ல...
சமந்தாவுடன் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு, பீச்சில் நடக்கும்போது அவரை பின்தொடர்ந்து கையையும், காலையும் ஊன்றி பட ஹீரோயின் வருவதுபோல் நேனொக்கடெய்ன் என்ற படத்துக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் ஆந்திராவில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்துவதுபோல் காட்சி இருப்பதாக குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை...
2014-உல்க கோப்பை கால்பந்து போட்டியின் 'எச்' பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது. இடைவேளை வரை அல்ஜீரியா அடித்த 'பெனால்ட்டி' கோலை சமன் செய்வதற்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் வீரர்களின் முயற்சியை மரோவேன் பெல்லோவ்னி 70வது நிமிடத்தில் நிறைவேற்றினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்த பெல்ஜியம் அணி, தனது முதல் வெற்றியை சுவைத்து, அல்ஜீரியாவை வீழ்த்தியது.
பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது. இடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் எடுக்வில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென் கொரியா முதல் கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது. இரண்டாவது கோல் அடிக்கும் இலக்குடன் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. அனுமதிக்கப்பட்ட ஆட்ட நேரமான...