ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2 வது ஆட்டத்தில் 47 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது. இந்தியா– வங்காளதேச அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை...
இந்தோனேசியாவில் இருந்து அகதிகள் படகு ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் 97 பேர் பயணம் செய்தனர். மலாக்கா ஜலசந்தி அருகே பான்டிங் கடற்கரை நகரில் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் வந்த போது அந்த படகு கடலில் மூழ்கியது. எனவே அதில் பயணம் செய்தவர்கள் கடலில் தத்தளித்தனர். அதை பார்த்த மலேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் ஒரு படகை அனுப்பினர். விரைந்து சென்ற அவர்கள் 31 பேரை மட்டுமே மீட்டனர்....
ஈராக்கில் பாக்தாத் நகரை தீவிரவாதிகள் சூழ்ந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள மதக் கலவரத்தால் ஈராக் இரண்டாக உடையும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரம் உருவானது. தற்போது அதுவே உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா பிரிவினரின் அரசை எதிர்த்து சன்னி பிரிவின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வலிமை வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவாக உள்ளனர். அதனால்...
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டில் மிகவும் விருப்பம் கொண்ட ஆப்பிரிக்க நாட்டு ரசிகர்கள் பொது இடங்களில் வைக்கப்படும் பெரிய திரைகளிலோ அல்லது சாலை ஓரத்தில் கூடி கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சிகளிலோ போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள். இதுபோல் வடகிழக்கு நைஜீரியாவில் இந்த மாதத் துவக்கத்தில் மக்கள் கூடி போட்டியை ரசித்துக்கொண்டிருந்த இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று மாநில ஊடகங்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளன. இந்த செய்தியை உறுதிப்படுத்திய ஹென்ங்யாங் நகரின் பெண் காவலர், பொதுமக்கள் யாருக்கும் இதில் காயமேற்படவில்லை என்றார். ஹென்ங்யாங் நகரின் புறநகர்ப்...
ஈராக்கில் சன்னி இனத்தை சார்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி அங்குள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர். நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் முடிவில் அவர்கள் மேலும் முன்னேறி வரும் கிளர்ச்சியாளர்களுடன் ஈராக் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் சலாஹிதீன் மாகாணம் பாய்ஜி...
வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் அடங்கிய குழுவினர், துணுக்காய் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- நான் துரோகி என்று சிலரைக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்தன. இதுவரை...
பொதுபலசேனா இனவாத அமைப்பு அல்ல. முஸ்லிம்களை ஒருபோதும் எதிரிகளாக நாம் நினைக்கவில்லை எம்மை அரசாங்கத்தின் அடியாட்களெனவும், புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் செயற்படுகின்றார்கள் எனவும் கூறும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் பொதுபல சேனா பௌத்த அமைப்பு செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
வவுனியாவில் நாளைய தினம் (19.06.2014) அன்று முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவரும் கொழும்பு அளுத்கம சம்பவத்திற்கெதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளனர். இதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எவ்விடத்தில் நடைபெறும் என்ற விடயம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.    
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் ஒரு நடிகர். இவர் படத்தில் நடிப்பது மட்டுமின்றி அப்படத்தை எப்படி விளம்பரம் செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவாறாம். அதாவது தன் படம் வெளிவரும் முதல் நாள் ஆங்கில நாளிதழ் அதுவும் முன்னணி நாளிதழில் முழு பக்கம் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பது...