இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம்...
யாழ். வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன போராட்டத்தை குழப்பும் வகையில் மக்களுக்கு பல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து நீதவான் கட்ரைட் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய விசாரணைக்குழுவினர் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்குழுவினரிடம் 229,028 போலி மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களினால் இந்த மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. போலி முறைப்பாடுகளை செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் நாடு கடந்த தமிழீழ...
  ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் வெளிநாட்டு செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார். அமைச்சர் உள்ளூர் ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தானது, ஒரு அப்பட்டமான...
போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்கள் அளிக்கும் சாட்சியங்களைப் பொறுத்து தீவிரமானதாக இருக்குமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இது ஒரு மோசமான நிலைமை. நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்றோம். அளிக்கப்படும் சாட்சியங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உள்நாட்டிலும்,...
படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக...
யாழ். குடாநாட்டின் முதலாவது இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன.    24 ஆண்டுகளாக தொடர்ந்து அகதி முகாம்களிலேயே அவல வாழ்வு வாழ்ந்து வரும் வலி.வடக்கு மக்கள் இன்று 25 ஆவது ஆண்டுக்குள் கால் வைக்கின்றனர். அவர்களது வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்தவர்களாக   இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களாக பெரும் மனக் கிலேசத்துடன் அவர்கள் இந்தக் கால் நூற்றாண்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.   ...
17:26:43 தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். * எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. * சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள...
ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார். கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில் இலங்கை படங்கள் 2ல் நடித்தார். தற்போது மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த ஆண்டு விடியும் முன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி உறவினர் மகன் வருண்...
கங்கனா ரனவத் நடித்த இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் கங்கனா ரனவத் நடித்த படம் குயின். இதில் வைதீகமான பெண்ணாக இருந்து துணிச்சல்காரியாக மாறும் கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்குவதில் போட்டி நிலவியது. தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இதன் உரிமையை பெற்றிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,கங்கனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரைப்போன்ற தோற்றமும், பாவமும் கொண்ட நடிகை...