நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளுடன் 4323 சார்ஜர்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்களின் மொத்த எடை 367 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது
போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்
Thinappuyal News -
30 ஆண்டுகளான நீடித்த போரின் போது பௌத்த பிக்குகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்.இன்றும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில கிராமங்களை பௌத்த பிக்குகளே பாதுகாத்து வருகின்றனர்.குறித்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவி சிங்கள மக்களை விரட்டியடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை பௌத்த பிக்குகள் தடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் சில கிராமங்களை...
பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை: தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம்
குருணாகலில் இன்று அதிகாலை இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு, அதிலொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் தருவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தகவல் தர விரும்புவர்கள் 0774784648 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குருணாகல் பிரதேசத்தில் இன்று அதிகாலை இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையை அடுத்தே பொலிஸ் திணைக்களம்...
எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன்: எச்சரிக்கிறார் பசில்
வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபை முதலமைச்சரை சந்திப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சந்தர்ப்பம் கேட்டமைக்கு இன்னும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை என்பது குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடமாகாண சபையின் முதலமைச்சரினால் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர்...
தடைசெய்யப்பட்டவர்கள் இந்தியா செல்ல முடியாது:-
இலங்கை அரசின் தடைப்பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டது – தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்:-
குண்டனங்கள் தொடர்கின்றன:-
இந்திய அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம்
16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி...
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கைகால் பொருத்தும் நிலையம் பேருதவியாக அமையும்.
அமைதிகரங்கள் திறப்பு விழாவில் வட மாகாண சுகாதார அமைச்சர்
கடந்தகால 30 வருட யுத்தத்தினால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உளவளத்துணை மற்றும் செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்கான இந்த செவை நிலையம் வன்னிப்பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதானது பாராட்டுதலுக்குரியது என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மாங்குளம் பிரதேசத்தில் லெபெறா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட...
உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் பதவி குறித்த பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறித்த உயர் பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் அதிகாரி பிரபல்யமானவர் என சிங்களப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நிப்போன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை குழப்பியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் பொதுபல சேனா அமைப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.
கோத்தபாயவுக்கு நெருக்கமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான...
இலங்கை விஜயம் குறித்து பாப்பாண்டவர் இன்று தீர்மானிப்பார்
இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து பாப்பாண்டவர் இன்றைய தினம் தீர்மானிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பேராயர்களை, பாப்பாண்டவர் தனித்தனியாக சந்திக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை பாப்பாண்டவரை கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஏனைய இலங்கைப் பேராயர்களும் சந்தித்தனர்.
இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கத்தோலிக்க பேராயர்கள் கவனம் செலுத்த வேண்டுமென பாப்பாண்டவர் கோரியிருந்தார். இன்றைய...
அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே...
* ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில்...