அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.இவ்வாறு லாக் செய்வது இலகுவாகவும், பயனர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் இருக்கின்றது.இதனைப் போன்றே விண்டோஸ் மற்றும் அப்பிளிக் மேக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய கணனிகளையும் லாக் செய்வதற்கு Eusing Maze Lock எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.  
வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக தென்கொரிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹீலியம் நிரப்பப்பட்ட பெரிய அளவிலான மிதக்கும் பலூன்களின் மூலம், வட கொரியாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை அந்நாட்டிற்குள் அனுப்பி தென் கொரிய ஆதரவாளர்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட கொரியாவில் இருந்து வெளியேறியவரும், தென் கொரியாவின் தற்போதைய ஆதரவாளருமான பார்க் சாங்...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த அறிவிப்பினை கடந்த புதன்கிழமை நாசா வெளியிட்டது. பின் அது பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதில் இசெட்-2 என்ற விண்வெளி உடை 62 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டது. இந்த உடை தொழில்நுட்பம் நிறைந்ததாக, வருங்காலத்தில் நாள்தோறும் அணியும் உடை போன்று காட்சி தருவதாக வடிவம்...
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இந்த சம்பவத்தில் பலியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்குணானந்தம் அருளநாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர். பலியானர்வர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் யாழ்ப்பாண போதனா...
இத்தாலியின் மிலானோ நகரிற்கு அருகாமையில், சினிசல்லோ பால்சோமா பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டினுள் உயிரிழந்த நிலையில் இருந்த இலங்கையரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இத்தாலி குடியுரிமைப் பெற்றுக் கொண்ட குறித்த நபருடன், இலங்கையைச் சேர்ந்த தம்பதியினரும் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை தொடர்பில் குறித்த தம்பதியினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்களை பொலிஸார் இதுவரையில்...
போலிக் கடவுச் சீட்டில் பயணம் செய்த இலங்கையர் ஒருவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான குறித்த இலங்கையரின் கடவுச் சீட்டில் தமிழகத்தின் முகவரி இடப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது அது போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர், தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக பொலிஸார் சந்தேக நபரை மாநில நீதவான் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தியதாகவும், அவரை...
ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதாரங்களுடன், “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகளின் கும்மாளமும், நாசகார வேலையும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். இக் கட்டுரையுடன் எனது மின்னஞ்சலும் சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்த காரணத்தினால், எல்லாமாக 27 மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்றன. இதில் மூன்று மின்னஞ்சல்கள் தவிர்ந்த மற்றைய மின்னஞ்சல்கள் யாவும்...
அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால், இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்களுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த கூற்றை மேற்கோள்காட்டியே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கா தற்போது புரிந்து...
இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த இராணுவ முகாம்களுக்காக மொத்தமாக 650 ஏக்கர் காணிப் பரப்பினை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக 145, 885 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான காணியை அரசாங்கம்...
இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார் அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார் இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவு...