லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக சீனுராமசாமி இயக்கும் படம், இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி ஜோடியாக வழக்கு எண் ஹீரோயின் மனீஷா நடிப்பதாக இருந்தது. இடையில் சீனு ராமசாமிக்கும், மனீஷாவுக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனீஷா விலகிக் கொண்டார். அடுத்த நாளே அவரது கேரக்டருக்கு அட்டக்கத்தி நந்திதா தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியது. மனீஷாவின் வாய்ப்பை பறிக்க நந்திதா...
ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2000 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து...
வீரம் படத்தை தொடர்ந்து கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடக்கிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள், துடிக்குது புஜம் போன்ற பெயர்களை பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆக்ஷன் படமாக தயாராகிறது.
‘நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும் எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா’ என்று அஜீத் பேசும் பஞ்ச் வசனம் படத்தில் உள்ளது. படப்பிடிப்புக்காக புனே சென்ற...
ரஜினியின் ‘கோச்சடையான் படம் வருகிற 9–ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பாலநமச்சி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக பரிவார் பவுண்டேஷன் ஜெனரல் மானேஜர் தெய்வம் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிவகாசி ரமேஷ், மாரி பிச்சை, முருகன், சசிகுமார், குணா,...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பதவி ஏற்கவுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோரின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது.
இப்பொறுப்புக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசும் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து...
பாலிவுட் நடிகை லீபக்ஷி எல்லவாடி உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்க்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.பாலிவுட் நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே அடிக்கடி இனம் பிரியாத இணைப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஏற்கனவே இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதல் வலையில் சிக்கி இருப்பது பற்றி பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்...
காதலியின் பிரிவு என்னை சோகத்தில் ஆழ்த்தவில்லை என்று இளவரசர் ஹாரி நிரூபித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இளவரசர் ஹாரி, தனது காதலியான க்ரேசிடா போனஸை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் நண்பரான பெல்லி திருமணத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.
இந்த திருமண விழாவிற்கு ஹாரி, தனது காதலியுடன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் மட்டும் தனியாக வந்து திருமண விழாவில்...
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் உதவிசெய்து வருகின்றனர். இவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள இஸ்லாமியவர்கள் ஆவார்.
இந்நிலையில், இந்த தீவிரவாதக்குழுவினர், சிரியா பாலைவனத்தில் ஒரு நபரை முழங்காலில் முட்டி போட வைத்து கொலை செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளியில்,...
சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படும் இன்றைய தருணத்தில் தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் என்பதையும் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் எழுத்தில் மட்டுமே உள்ளதாகவும் நடைமுறையில் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன் ஊடக சுதந்திர...
குருநாகல், பொத்துஹெர பகுதியில் புதன்கிழமை (30) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பளைக்கான ரயில் சேவை அட்டவணையின்படி இன்று இயங்குவதாகவும் சிறு திருத்தங்கள் இன்று காலையுடன் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிற்பகல் இரண்டு மணியுடன் ரயில் பாதை முற்று முழுதாக தயாராகுமெனவும் ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.