தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கடுமையான தொனியில் அறிவிப்பை விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்:
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கையின் நிழல் அரசர் கோத்தாபய அறிவித்துள்ளார்.
இந்த...
நீண்ட கால யுத்த இடைவெளிக்குப் பின்னர் இலங்கைவாழ் மக்கள் நல்லதொரு விடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டததில் பகைமைகளை மறந்து அனைவரும் ஒருகுடையின் கீழ் அணிதிரண்டு புதுவருடத்தில் சாந்தி, சமாதானம், சந்தோஷம், சுபீட்சத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதோடு இப்புதுவருட தினத்தில் நாடளாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் இந்த புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தினப்புயல் பத்திரிகை மற்றும் தினப்புயல் இணையத்தளமானது உலகமெங்கிலும் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்கள், வாசகர்கள், வர்த்தக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
Thinappuyal News -
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும் அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது.
வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில் மக்கள் குடிமனையற்ற மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக...
டென்மார்க்கில் நடைபெற்ற அணையாத் தீபம் அன்னை பூபதியின் நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும்
Thinappuyal News -
அணையாத் தீபம் அன்னை பூபதியின் இருபத்தியாறாம் ஆண்டு நினைவுநாளும்
நாட்டுப்பற்றாளர் தினமும் டென்மார்க்கில் வையின் நகரத்தில் நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் திரு. கணேசையா விமலேஸ்வரன் திரு.தம்பிஐயா மார்க்கண்டு திரு.செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் திரு.மதியழகன் கார்த்திகேசு அவர்களின் திருவுருவ படங்களிற்கு அவர்களின் குடும்பத்தினரால் ஈகச்சுடர்
ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் சுடர் வணக்கம்
அகவணக்கம் செலுத்தப்பட்டது.மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி கானங்களோடு நிகழ்வு
ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து...
சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. பெண் போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது-பிள்ளையான்.
Thinappuyal News -
நாங்கள் மண் மீது கொண்டிருந்த பற்று காரணமாகவே வருடக்கணக்கில் போரிட்டோம். வடக்கு மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வெருகலில் நடைபெற்ற வெருகல் படுகொலை நினைவு தினத்தின் நினைவுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்த நிறுத்த மீறல்...
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான...
பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போதும் இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு...
2015ம் ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்? நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
Thinappuyal News -
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த அரசுத் தலைமைப் பீடம் தீர்மானித்துவிட்டது. அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதியாகத் தெரிவித்தாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 28ம் திகதி நடைபெற்ற தென்மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அச்சமயம் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என்று கோடிகாட்டியிருந்தார்.
அதன்படி 2016 நவம்பரில்தான் புதிய ஜனாதிபதியின் பதவிக்...