வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன.
உலக கோப்பை
16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. உலக மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் மிர்புர் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கின்றன.
தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் மரண அடி, ஆசிய...
சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா?
கவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும்,...
குளிர் காலத்தில், வெளியில் குளிராக இருந்தாலும் கூட புத்தம் புதிய காற்று நமக்கு தரும் உணர்வு மிக சிறப்பானது. ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் புதிய காற்றினை உணர்வது நமக்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. குளிர் காலத்தில் வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நாம் இவற்றை சாத்தியமாக்கி கொள்ளலாம்.
இதயத்திற்கான பயிற்சிகளை வெளியில் மேற்கொண்டு பின்பு உள்ளே யோகா ,எடை தூக்குவது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இதற்காக வெளியில் உடற்பயிற்சி...
பொல்லாதவன்', 'ஆடுகளம்', '3', 'நையாண்டி' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார். எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
'வேலையில்லா பட்டதாரி' தனுஷ் நடிக்கும் 25வது படம். எனவே,...
இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித்தும், ஜூஹி சாவ்லாவும் 27 ஆண்டு கால பகையை மறந்து அண்மையில் ரிலீஸான குலாபி கேங் படத்தில் நடித்தனர் .
இப்போது 20 ஆண்டு கால பகையை மறந்து ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர்.
1994ம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது சுஷ்மிதா சென் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இந்திய...
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தற்போது விஜய் ஜோடியாக கத்தி மற்றும் சூர்யா ஜோடியாக அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.
சமந்தாவும் சித்தார்த்தும், காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ள நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் சமந்தா கூறும் போது; தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நல்ல ஆட்சியாளரை தெரிவு செய்ய இது தான் சரியான நேரம். நமது நாட்டுக்கு நரேந்திர...
எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். நடிகை லட்சுமி மேனனிடம், 'விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்து லட்சுமிமேனன், 'கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார்' என்று கூறியுள்ளார்.
விஷால் - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'நான் சிகப்பு மனிதன்'....
இந்தப் பயணத்தின் போது, அவுஸ்திரேலியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய தகவல்களை அவர் பூர்த்தி செய்வாரென எதிர்பார்க்கப்படுவதாக ஏபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு வார கால வர்த்தக விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ரோனி அபொட் முதற்கட்டாக ஜப்பான் சென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தில் மாட்டிறைச்சிக்கான வரியை 38.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை குறைப்பது பற்றி ஜப்பானியர்கள்...
ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈரானிடம் அமெரிக்கா மீண்டும் வர்த்தக உறவை புதுப்பித்துள்ளது.இதுகுறித்து போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
"விமான உதிரி பாகங்களை மட்டும் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய விமானங்களை விற்பனை செய்ய அனுமதியில்லை. இந்த அனுமதியும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
அமெரிக்காவில் உள்ள மற்றொரு...
ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயக்க பணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை மின்சார சபையின் மின் பொறியிலாளர்களின் ஊழல், முறைகேடுகள் மற்றும் மின்சார சபையின் தன்னிச்சையான நிர்வாக முடிவுகள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணம்...