சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள விடுதியில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல்படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென்சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்பதாக படங்களை வெளியிட்டது.
பிறகு, மலேசியா மற்றும் வியட்நாமுக்கு இடைப்பட்ட பகுதியில் இவ்விருநாடுகளையும் சேர்ந்த மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் அதுபோன்ற மிதக்கும் பொருள் எதுவும் அங்கு தென்படவில்லை.
இந்நிலையில் சீன அதிகாரிகள் தங்கள் செயற்கைக்கோள்கள் தவறாக படங்களை...
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞனை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் சென்ற குழுவினர் வாளினால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...