நடிகர் இயக்கும் காதல் கதை 

416



1980களில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் நடித்தவர் ஷங்கர். பின்னர் மலையாள படங்களில் நடிக்கச்  சென்றதுடன் படங்களும் இயக்கினார். 34 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் பக்கம் தலைகாட்டி இருக்கிறார். மணல்  நகரம் என்ற படத்தை இயக்குவதுடன் முக்கிய வேடமொன்றிலும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, மனைவி, குழந்தை கு டும்பத்தை விட்டுவிட்டு வேலை தேடி அரபு நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் பற்றிய கதையாகவும் காதல் மற்றும் நட்பு பற்றியும்  இணைந்த கதையாக உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் 50 நாட்கள் நடந்துள்ளது. இது சவால£க இருந்தது.இதில் கவுதம் கிருஷ்ணா, பிரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி நடித்திருக்கின்றனர். ரெனில் கவுதம் இசை. ஜெ.ஸ்ரீதர்  ஒளிப்பதிவு. ஆர்.வேலுமணி வசனம். எம்.ஐ.வசந்த்குமார் தயாரிப்பு

 

SHARE