ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

339

ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களுக்கு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது.

இதற்காக படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரஜினி வெளிநாட்டில் வயதான தோற்றத்தில் கம்பீரமாக அவருக்கே உரிய ஸ்டைலில் உட்கார்ந்திருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்கள். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SHARE