திருமணத்திற்கு முன் மலையாளத்தில் அமலாபால் நடித்து வரும் திரைப்படம் மிலி. |
நேரம் திரைப்படத்தில் நடித்த நவீன் பாலி இதில் அமலாபாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திரைப்படத்தின் படபிடிப்பில் பம்பரம் போல் சுற்றி வருகிறாராம் அமலாபால். இதை பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதிய அமலாபால், மிலி திரைப்படத்திற்கான படபிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள சண்முகம் கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இதில் 21 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு நடத்தி முதல் முறை தான் சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் சதீஷ் தயாரிப்பில், ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில், நவீன் பாலி, அமலாபால் ஜோடியாக நடித்து வெளிவர உள்ளது இத்திரைப்படம். |