பழங்களை பழுக்க வைப்பது எப்படி?………….

386

வேகமான வாழ்க்கை முறையால், தற்போது சிறிய பழக்கடைகளில் இருந்து, பெரிய பழக்கடைகள் வரை அனைத்து இடங்களிலும், பழங்களை பழுக்க வைக்க ரசாயன முறையை கையாளுகின்றனர்.
இதற்கு பயன்படுத்தும் கார்பைட் கற்களால், வயிற்று உபாதை ஏற்படுவது நிச்சயம். கார்பைட் பயன்படுத்தினால் பழங்கள் விரைவில் பழுத்து விடுகின்றன. ஆனால், அதனால் உடலுக்கு ஏற்படும் ஒவ்வாமை அளவிட முடியாது. வயிற்றுப் போக்கு, நாள்பட்ட வியாதிகளை ஏற்படுத்தும்.

வீட்டிலேயே ஆரோக்கியமாக பழங்களை, பழுக்க வைக்கும் முறையை தெரிந்து கொண்டால், நோய் தாக்குதல்களில் இருந்து எளிதில்
தப்பலாம். நன்கு முற்றிய லேசாக மஞ்சள் நிறம் தோன்றும் பழங்களை, ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து, வாழை சருகுகளால் மூட வேண்டும். இத்துடன் நன்றாக பழுத்த எலுமிச்சை, சாத்துக்குடி பழங்களில் ஏதேனும் ஒன்றைப் போட்டு மூடி வைத்து விட்டால், மூன்று அல்லது நான்கு நாட்களில் நன்கு பழுத்து விடும்.
சாத்துக்குடி, எலுமிச்சை பழத்தில் இருந்து வரும் ஒருவித என்சைம், காயாக உள்ளவற்றை கனியாக்கி விடும். பழங்களும் ஒரே சீராக பழுத்துவிடும். ஒருபுறம் கனிந்தும், ஒரு புறம் காயாகவும் இருக்காது. நமது தேவைக்கு ஏற்றவகையில் பழுக்க, பழுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த பக்க விளைவுகளும் இருக்காது.
எல்லா பழங்களையும் இந்த முறையில் பழுக்க வைக்க முடியும். இதனால் உடல் ஆரோக்கியமும் கெடாது.

SHARE