பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.

315

உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டவும், மீள நிகழாமையை உத்தரவாதப் படுத்துவதற்கும், நஸ்ட ஈட்டிற்குமான நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான,பொறிமுறைகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நல்லிணக்கம் என்பது ஓரு செயற்பாடு என்பதையும் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள், பலர் பொறுமையிழந்துள்ளது எனக்கு தெரியும்,  அவர்கள் பொறுமை இழந்துள்ளதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம், அவர்களிற்கு அதற்கான உரிமையும் உள்ளது. எனினும் இந்த நடைமுறை மிகவும் அவதானமாக திட்டமிடப்படவேண்டிய ஓன்று.எங்கள் தேசம் சுதந்திரத்திற்கு பின்னர் பல தடவைகள் தோல்வி அடைந்துள்ளது, நாங்கள் மீண்டும் தோல்வியடைய முடியாது.
நல்லிணக்க செயற்பாடுகள் என்பது உண்மையை கண்டறிதல்,நீதி,தமிழ் மக்களின் துயரங்களிற்கு தீர்வை காணகூடிய அரசியல் தீர்வு மீளநிகழாமை மற்றும் நஸ்டஈடு என்பவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம்
அங்கீகரிக்கின்றது.
மக்கள் வழங்கிய ஆணையுடன் ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும் அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான சூழலை உருவாக்குவதற்கு அவசியமான சில முக்கிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் ஜனாதிபதி சிறிசேன ஜனவரியில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட வேளை அவர் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் தெரிவுசெய்யப்பட்டால், தேசிய சுயாதீன நீதிபொறிமுறைகள் ஊடாக பொறுப்புக் கூறலிற்கான நடவடிக்கைகள் முன் வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தவும் சகலசமூகங்களை சேர்ந்த மக்களிற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் பொறுப்புக்கூறல் முக்கியமானது. இந்த நடை முறையில் நீதி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம், பல  வருடங்களாக எங்கள் சமுகத்தில் காணப்பட்ட வன்முறைகள் காரணமாக  அற்றுப்போயுள்ளபொறுப்புக்கூறும் கலாச்சாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பனவற்றை மீள ஏற்படுத்துவதற்கு தீர்வு காணப்படவேண்டிய முக்கிய விடயங்கள் இவையாகும்.
அரசமைப்பின் வரையறைக்குள் உண்மையை கண்டறிவதற்கும்,நீதிக்கும், மீள நிகழாமையை உத்தரவாதப் படுத்துவதற்கும், நஸ்டஈட்டிற்குமான நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான, பொறிமுறைகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உண்மையை கண்டறிவதற்கு அரசாங்கம் இரு பொறிமுறைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
1- தென் ஆபிரிக்காவின் உரிய அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் உண்மை,நீதி நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக் குழவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த பொறிமுறை இரு பிரிவுகளை கொண்டிருக்கும், ஒன்றுநாட்டின் சகல சமயங்களின் மத பிரமுகர்களையும், ஆணையாளர்களையும் கொண்ட கருணை சபை. யாரால்  தங்களிற்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தெளிவற்றநிலையில் உள்ளவர்கள் மற்றும் மற்றும் அரசாங்கத்தினதும் சமுகத்தினதும் நடவடிக்கைகளால் ஓடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் தங்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்கு இந்த ஆணைக்குழு உதவும்.
2- காணமற் போனவர்கள் தொடர்பான அலுவலகமொன்றுஏற்படுத்தப்படும். காணமற் போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு உண்மையை அறிவதற்கு  உள்ள உரிமையின் அடிப்படையிலேயே இது ஏற்படுத்தப்படும்.
-நீதிக்கான உரிமையின் அடிப்படையில் நீதிதுறை பொறிமுறை யொன்று விசேட ஆலோசனை குழுவுடன் ஏற்படுத்தப்படும், இது பாதிக்கப் பட்டவர்களிற்கு உள்ள உரிமைiயும், சகல சமூகத்தவர்களும் சந்தித்த மனித உரிமை மீறல்களிற்கு காரணமான தண்டனையிலிருந்து விலக்களித்தலிற்கு தீர்வை காணவுமே இது ஏற்படுத்தப்படும். – நஸ்ட ஈட்டிற்கான உரிமைகளின் அடிப்படையில் இதற்கான அலுவலகமொன்றுஏற்படுத்தப்படும்,

உண்மை நல்லிணக்கம், நீதி, மீண்டும் நிகழாமை தொடர்பானஆணைக்குழு உட்பட ஏனைய பொறிமுறைகளின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தவே இது ஏற்படுத்தப்படும்.என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE