பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறக்கும் முன்பே இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல்

447

 

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நியூசிலாந்து ஹெரால்டின் அறிக்கையின்படி, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2022 ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செயற்பாடுகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அரச குடும்மத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. “எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், ஆனால் மன்னரின் உடல்நிலை உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது” என அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஹெரால்டிடம் கூறியுள்ளார்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உதவியாளர்கள், “Operation Menai Bridge” எனப்படும் இறுதிச் சடங்குகளை விவரிக்கும் அவரது அதிகாரப்பூர்வ பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 8, 2022 அன்று ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே பல நூறு பக்கங்கள் கொண்ட ஆவணம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னரின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து “Operation Menai Bridge” அடிக்கடி புதுப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு “Operation London Bridge” என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் முதல் பொதுப் பணிகளில் மன்னர் ஈடுபடுவார் என கடந்த வாரம் பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE