பிரெஞ்ச் ஓபன்: சானியா-காரா பிளாக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

642
பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி கனடாவின் காப்ரியேலா டப்ரோவ்ஸ்கி-போலாந்தின் அலிக்ஜா ரொசோல்ஸ்கா இணையை சந்தித்தது.

தொடக்கம் முதலே சானியா-காரா ஜோடி அசத்தலாக ஆடியது. இந்த ஜோடி முதல் செட்டை 6-1 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் எளிதில் கைப்பற்றி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா-காரா ஜோடி செர்பியாவின் ஜெலினா ஜாங்கோவிக்-ரஷியாவின் அலிசா க்ளேபனோவா ஜோடியுடன் மோதவுள்ளது.

SHARE