புதிய அரசியல் கலாச்சாரத்தை அறியாத அறிவிலி அரசியல்வாதிகள்: விஜிதமுனி கடும் தாக்குதல்

285
இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை உணர்ந்து கொள்ளத் தெரியாத அறிவிலிகள் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா விமர்சித்துள்ளார்.

பிபிலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி சொய்சா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலாகட்டும், அல்லது பொதுவாழ்க்கையாகட்டும் நான் எப்போதும் மிகச்சிறந்த வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பேன். பொதுமக்களின் நன்மை கருதி அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்ததும் அவ்வாறான ஒரு முடிவுதான்.

இலங்கையில் தற்போது புதிய அரசியல் கலாச்சாரமொன்று உருவாகியுள்ளது. நல்லிணக்க அரசியல் கலாசாரமே அது. இதன் மூலமாக அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியின் பலன்கள் சென்றடையும்.

இதனை அறிந்து கொள்ளாத அல்லது உணர்ந்து கொள்ளத் தெரியாத அறிவிலிகளான அரசியல்வாதிகளே எங்களையும், தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் விமர்சிக்கின்றார்கள் என்றும் அமைச்சர் விஜிதமுனி செய்சா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

SHARE