யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், உலக அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சி மன்றாடிக் கேட்ட போதும் தமிழர்களுக்கான எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமர்வின்போது, தமிழர்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஏமாற்றமே கிடைத்தது என இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா முன்றில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.