அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையில் பிரிவுக்கு இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-4 5-7 6-4 6-4 என போட்டியை வென்றார் ஜோகோவிச். இது அவருடைய 2-வது அமெரிக்க ஓபன் பட்டம், இதோடு சேர்த்து அவர் மொத்தம் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். பெடரர் கடந்த மூன்று வருடங்களாக ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |