போர்க் காலத்தில் இருந்ததை விட மக்கள் இப்போதுதான் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்- மங்கள சமரவீர

416

 

நாட்டு மக்கள் உணவுக்ககா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர், சிலர் பட்டினியேடிருக்கின்றனர். ஆனால் மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய சகாக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். – இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. ஊவாமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐ.தே.க., ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறது

mankala 58477855

ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணன்டோவை ஆதரித்து ஹப்புத்தளை,பேருவிலா தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை பிரசார கூட்டமொன்று நடைபெற்றது. இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- பெரும்பகுதி மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகின்றனர். ஒரு காலணியை வாங்குவதற்காக 200 ரூபாவைப் பெறுவதற்கு எவ்வளவோ பாடுபடுகின்றனர். ஆனால் மஹிந்த குடும்பமோ விலை உயர்ந்த உடைகளுடன் ஆடம்பரமாக வாழ்கின்றது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின் ஒரு நன்மை நிகழ்ந்திருக்கிறது. அது என்னவென்றால் வடக்கும் தெற்கும் இணைந்திருக்கிறது. மக்கள் வடக்குக்கும் தெற்குக்கும் பயணிக்கமுடிகிறது.

அதனைவிட எந்த நன்மையும் கிட்டவில்லை. போர்க் காலத்தில் இருந்ததை விட மக்கள் இப்போதுதான் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இலங்கையில் இரண்டு உலகங்கள் இருக்கின்றன என்பதுக்கு இவைதான் எடுத்துக்காட்டு. இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரிதும் பங்களிப்பது மலையக உற்பத்திகளே. ஆனால் தோட்டத்துறையினருக்கு மஹிற்த அரசு எந்த நன்மைகளையும் செய்யவில்லை. அவர்களுக்கான சம்பளம் மற்றும் முறையான வாழ்க்கை நிலைமைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

ஆனால் இந்த நிலைமை கட்டாயம் மாறும். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமை உறுதிப்படுத்தப்படும். ஐ.தே.க. அந்த இலக்கை அடைய ஊவா தேர்தல் முதற்புள்ளி. நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி.- என்றார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜயவர்தன, மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சி.வை.பி. ராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

SHARE