மகிந்த தேர்தலை விரும்பவில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

469
 
 ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுவதனை விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனையே தமது கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Majeed_Swearing_2

தற்போதைய பாராளுமன்றம் மக்களின் அபிலாஸைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை புதிதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதனையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில முக்கியமான விடயங்களின் போது சில அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டை எட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல்கள் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் அணி திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE