மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, ஈரான் நாட்டின் இஷ்ஃபான் எனும் நகரத்தில் வசித்து வரும் செல்வந்த குடும்பமொன்றை சேர்ந்த உர்ஃபா எனும் பெயரிலான ஒரு இளம் பெண்ணை திருமணம் முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகனின் திருமண நிகழ்விற்கு அமைச்சர் மேர்வின் சில்வா குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் சகிதம் ஈரானில் இஷ்ஃபான் நகரத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்டுகின்றது. அத்துடன் மேர்வின் சில்வாவின் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமே அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. எப்படி இருப்பினும் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவிற்கு இது முதல் திருமணமும் அல்ல ஈரான் பெண் முதல் பெண்ணும் அல்ல.