கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மரணித்த மகிழுரைச் சேர்ந்த கெங்காதரன் மாதுமை (வயது-22) என்ற களனி பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியின் மரணத்திலேயே சந்தேகம் நீடிக்கிறது.
விசம் தீண்டி இறந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தபோதிலும் பின்னர் தாயாரின் பார்வையிலே சந்தேகம் வரவே பிரபல பெண் சட்டத்தரணி திருமதி எஸ்.தாரணி மூலமாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஜூன் மாதம் 26ஆம் திகி வழக்கை விசாரித்த நீதிபதி எ.எம்.எம்.றியாழ் சடலத்தை மீள தோண்டியெடுக்க உத்தரவிட்டார்.
அதற்கமைய சடலம் கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எ.எம்.எம்.றியாழ், அம்பாறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் பி.சி.எஸ்.பெரேரா முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அம்பாறை போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி டாக்டர் பி.சி.எஸ்.பெரேரா மேற்கொண்ட விசேட பிரிசோதனையின் பின்னர் சடலம் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் கடந்த வியாழனன்று பிரேதம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதத்தை கொண்டுவர மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அமைப்பும் காரைதீவு மனித அரிசிருத்தித் தாபனமும் உதவி ஒத்தாசைகளை வழங்கியது.
அன்று மாலை பிரேதம் அம்பாறையிலிருந்து கொண்டுவரப்பட்டு கிராமத்திலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பரிசோதனையின்போது முக்கிய உடற்பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்தபிற்பாடே அம்பாறை போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி டாக்டர் பி.சி.எஸ்.பெரேரா இறுதி அறிக்கையை நீதீமன்றிற்கு அறிவிப்பார். அதன்பின்னரே உண்மை வெளிச்சத்திற்குவரும். அதுவரை மாணவியின் மரணம் மர்மமாகவே இருக்கும்.
– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyISaLdjt7.html#sthash.zp5wnOOc.dpuf